Tuesday, March 31, 2009

நறுக்குன்னு நாலுவார்த்த - 18

மக்கள் வாக்களித்து இலங்கையில் தமிழீழம் மலர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி:கலைஞர்.

இன்னாது. நேத்து நிவிஸ்ல இந்த மக்கள் வாக்களித்து இல்லியே தலீவா. காலைல கீது. நேத்து நாற வாயி இன்னைக்கு வேற வாயா? இல்ல சொக்கு இன்னா மேட்டருன்னிச்சா? தலீவா. எவ்ளோ வாக்களிக்கிறோம். உனுக்காக இன்னோண்ணு குத்தமாட்டமா. உனுக்கு அப்பால யாருன்னு மக்கள சொல்ல சொல்லேன். அது மட்டும் ஸ்டாலின்னு சடாய்க்கிறியே
________________________________________________

உலகமே எதிர்த்தாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்:ராஜபக்சே

இவ்ளோ கொயுப்பு ஆவாதுடா டேய் உனுக்கு. க‌யுத்துல‌ துண்டு வாகா போட்னுக்க‌ற‌. க‌ட‌ன‌ குட்ரா நாயேன்னு இஸ்தா தெரிஞ்சிடும். உன்ன‌ பெத்தாங்களா? செஞ்சாங்களாடா நாயே. சீ நாய் பாவ‌ம். மவனே முன்வெச்ச‌ காலு காணாம‌ போய் உன் சிப்பாய்ங்கொ எவ்ளோ பேருகீறாங்க‌ தெரிமாடா உனுக்கு.
________________________________________________
மேல்மாகாணசபைத் தேர்தலுக்கு (ஏப்ரல் 25) முன் புலிகளை அரசு முற்றாக அழித்துவிடும்: அமைச்சர் சமரசிங்க சொல்கிறார்

நான் கூட‌ க‌ட‌ங்கார‌னுக்கு இப்பிடி கேன‌ மாதிரி த‌வ‌ண‌ சொன்ன‌தில்ல‌. இவ‌னுங்க‌ பொய‌ப்பு இவ்ளோ கேவ‌ல‌மா பூட்சி.
________________________________________________
மக்களை மீட்கும் நோக்கில் சிறிய கால யுத்த நிறுத்தத்திற்கு அரசு தீர்மானம்

பொற‌ம்போக்கு பேமானி. பேங்க் லோன் வாங்க‌ற‌துக்கு இன்னா புளுவ‌றான் பாரு. சைனா கார‌ன் சொல்ட்டானா. க‌ட‌னுக்கு குட்த‌தெல்லாம் போறும். கைமேல‌ காசு. வாய்மேல‌ தோசைனு.
________________________________________________
என்னை கூட்டணியில் சேர்க்க எல்லா கட்சிகளூம் ஏன் பயப்படுகிறது தெரியுமா: நடிகர் கார்த்திக் பேச்சு


ஏன் தெரியாது? நீ வாய்ல‌ கூயாங்க‌ல்லு வெச்சிகினா மாதிரி பேசுவ‌. இன்னா பேச‌ற‌ன்னே தெரியாது. இது கூட‌ எய்தி குட்து தான‌ பேப்ப‌ர்கார‌ன் போட்ட‌து?
________________________________________________
மீண்டும் அதிமுகவில் இணைகிறார் கு.ப.கிருஷ்ணன்

தாவ‌ற‌த‌ பார்த்தா இனிசில் பொர்த்த‌மா கீதுபா.
________________________________________________
நான் சாதி,மதம் பார்ப்பவன் இல்லை:விஜயகாந்த்

நீ இன்னா பெச‌லு. ம‌வ‌னே எல‌க்சின் வ‌ரிக்கும் அல்லாரும் ஓட்டு தான‌ பார்க்குற‌து!
________________________________________________
பாமக போனதால் பாதிப்பில்லை: வீரப்ப மொய்லி

க‌ரீட்டு. ப‌த‌வி போனாதான் பாதிப்பு.
________________________________________________
மனித நேய மக்கள் கட்சியுடன் காங். பேச்சுவார்த்தை

அட‌ங்கொயாலே! மனித நேயம்னா என்னான்னு ம‌கிந்தாவ‌ கேட்டா சொல்டுபோறான். ஏன் பிராண‌ ஆப்பு ரென்டுத‌பா போய்டு வ‌ந்து திருப்ப‌தி சை திருப்தி அளிக்கிற‌துன்னு எட்து உட்டார‌ப்பா.
________________________________________________
புலிகளின் மணல் அணையை கைப்பற்றும் முயற்சி:சிங்களப்படைக்கு பலத்த சேதம்

ஆகா. இத‌த்தான் ம‌ண்ண‌ க‌வ்வுனான்னு சொல்ற‌தா?
________________________________________________
நேற்று கொடி பிடித்தவர்களெல்லாம்....:கலைஞர் பேச்சு
எங்களுக்கு ஓட்டு போட‌வேணாம்னு சொல்லு பார்க்க‌லாம்?
________________________________________________
அழித்துவிட்டோம்-இனி புலிகளிடம் விமானங்கள் இல்லை:சிங்கள ராணுவம்

ஹ‌ய்யோஓஓ ஹ‌ய்யோஓஓஓஓஒ. இப்போ கீதுன்னு அவ‌னுங்க‌ கூவினானுங்கோ?
________________________________________________
விடுதலைப்புலிகள் கேரளாவுக்கு வந்தார்களா?

நெக்கலுடா உங்களுக்கு. உங்கள மாதிரி தின்னுட்டு குட்சிட்டு கெடந்தா மஸாஜ், மர்ந்துன்னு போவிங்கோ. அவனுங்க ஏன் வர போறானுங்கோ. அப்பப்போ ஏன்டா பிலி வர்து வர்துனு கூவுறீங்கோ வெட்டி பசங்களா.
________________________________________________
ஈழத் தமிழர் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம்

திட்டம் போடாமலே இவ்ளோவா. அப்றம் திட்டம் போட்டுட்டோம். கணக்கு சரியா வரலனு அவனுங்களுக்குள்ளயே போட்டுக்குவானுங்க போல.
________________________________________________

Monday, March 30, 2009

நறுக்குன்னு நாலுவார்த்த -17

காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, தேர்தலை விட இலங்கை தமிழர் பிரச்சனைதான் முக்கியம். அப்பிரச்சனைக்கு நடவடிக்கை எடுப்பதுதான் முக்கியம் என்று சொன்னதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இன்னும் என்னாதான்சாமி ப‌ண்ணியாவ‌னும். சொல்ற‌த‌ அந்தம்மா சொல்ல‌ மாட்டாங்க‌ளா. இல்ல‌ன்னாலும் தொங்கு சொல்லாதா. சொக்குக்கு வக்காலத்து வாங்கறதுன்னா அய்யாக்கு கிக்கு.
_____________________________________________
கலைஞருடன் நடிகை ரம்பா சந்திப்பு

தொடைச்சின்ன‌துல‌ சுயேச்ச‌யா நிக்க‌ப் போறேன். கூட்ட‌ணில‌ சேர‌ட்டான்னு கேக்க‌ போயிருக்குமோ?
_____________________________________________
முதல்வருடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு

சிரிப்பு வ‌ர‌ல‌. சாரி.
_____________________________________________
தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்தாள‌ த‌விர‌ எல்லாரும் ம‌ல‌ரும்னு சொல்றாங்க‌. இவ‌ரு ம‌ல‌ர்ந்தாலாம். இன்னோரு அய்ய‌கோ பாக்கி இருக்கு. சொக்குவ‌ ந‌ம்பினேனே சொக்கா சொக்கானு.
_________________________________________________
துறவி என்றுகூறும் ஜெ.வுக்கு பதவிஎதற்கு:விஜயகாந்த்

அட‌ வெண்ண‌. நீ அர‌சிய‌லுக்கு புதுசுன்னாலும் அப்ப‌ட்ட‌மாவா ச‌ம்பாதிக்க‌ தானே ப‌த‌வி. துற‌விக்கெதுக்குன்னு கேப்ப?
_________________________________________________

இலங்கை தமிழ் மக்கள் அவதிப்படுவதற்கு இந்திய அரசுதான் காரணம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

இது லேண்ட் ஃபார் டையிங்னு ஆர்ட் ஆஃப் லிவிங் சொல்றத கேக்கமாட்டாங்க சாமி
___________________________________________________
வருண்காந்தி மீது தே.பா.சட்டம் பாய்ந்தது

அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியல் வாதிங்க உலகத்திலே
எதிரா பேசினா போட்டுதள்ளுடா தேசிய பாதுகாப்பு சட்டத்திலே!!!
____________________________________________________
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு

கைப்புள்ள‌. ஏன் ஊர்க்காவல் படை ஆளும் போறலயா. வலிக்குது அளுதுருவேன்னாலும் இனிமே ஒண்ணும் முடியாதுடி. ஊக்குதான்.
________________________________________
யுத்தம் காரணமாக இலங்கை மக்கள் பல வேதனைகளை அனுபவித்து வருவதாக ஷிவ்சங்கர் மேனன் தெரிவிப்பு

அடுத்த நோபல் உனக்குதான் ராசா. எப்பேற்பட்ட கண்டு பிடிப்பு. ஹிலாரிகிட்ட காவடி தூக்கிட்டு ஓடினப்ப இது தெரியலயா. சொக்குகிட்ட சொல்லுப்பா இத.
__________________________________________
மக்களை வெளியேறப் புலிகள் அனுமதிப்பின் இடைக்காலப் போர் நிறுத்தத்துக்குத் தயார். இலங்கைக்கான ஐ.நா. தூதுவர் பாலிகக்காரா அறிவிப்பு.

ஏண்டா வெண்ண! எந்த கண்டிசனும் போடாம நிறுத்தினா வர மக்கள் வரமாட்டாங்களாடா? வாங்கடா மக்கா. வந்ததெல்லாம் நாசம் பண்ணி அடைச்சி வெச்சிட்டோம். புதுசா வேணும்னு சாவரிங்களா? எடுபட்ட பயலுவ.
__________________________________________________
குமரன் பத்மநாதனுடனான ஹோல்ம்ஸின் பேச்சுவார்த்தையை வீரவன்ச பிழையாக அர்த்தப்படுத்தியுள்ளார்: றொபர்ட் ஓ பிளேக்

இருக்கிற‌ இருப்பில‌ ம‌கிந்த‌ பேசினாலே யாரு என்னானு பாக்காம‌ கோத்த‌வாயி புலினு சொல்லிடுவான்.
_______________________________________________

Sunday, March 29, 2009

நறுக்குன்னு நாலுவார்த்த - 16

காங்.அரசின் சாதனைபுத்தகம்:வீடு, வீடாக வினியோகம்: செய்தி
இதிலயாவது பக்சே ஒத்துக்கறா மாதிரி செத்தவங்க, அடிபட்டவங்க எண்ணிக்கை இருக்கா? ரொம்பதாண்டா ஏத்தம் உங்களுக்கு. அங்கங்க துப்பறத தனியா சாதனை போடுவிங்களா?
_____________________________________________________________
லல்லுவைவிட மனைவி,பிள்ளைகளுக்கே அதிகசொத்து
தன்னலமில்லா தலைவன். நல்ல குடும்பத்தலைவன்.
_____________________________________________________________
மாத சம்பளம் ரூ.6,250 இருந்தால்போதும் நானோ கார் வாங்கலாம்
அது சரி. எவ்ளோ சம்பளமிருந்தா பெட்ரோல் வாங்கலாம். ____________________________________________________________
ஏப்ரல் 1 முதல் எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்
நல்ல நாள் பார்த்தாய்ங்கப்பு. ஆமாம். அக்கவுண்ட்ல பணம் இருக்கணுமில்ல?
______________________________________________________________
தமிழகத்தின் நவீன புத்தர் விஜயகாந்த்:திமுக கமெண்ட்
ஆமாம். ஸ்ரீலங்காவின் நவீன புத்தர் மகிந்தான்னு சொக்கு சொல்லிட்டாங்கல்ல. இவரு சொல்ல வேணாம்?
_____________________________________________________________
தனித்தும்,விழித்தும்,பசித்தும் இருக்கிறேன்:விஜயகாந்த்
முதல் ரெண்டு பிரச்ன இல்ல கேப்டன். எலக்ஷன் நேரத்தில மூணாவது இருக்கப்படாதே?
_____________________________________________________________
திமுகவுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு
அய்யோ தாங்க முடியல. கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டின்னு நிறைய பானை விற்கும்னு நினைச்சாங்களோ?
_____________________________________________________________
40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்: தங்கபாலு
கில்லாடிபா தொங்கு. தமிழ்நாட்டிலன்னு சொல்லல. இந்தியா முழுக்கன்னாலும் இது ஓவரு.
_____________________________________________________________
வருண் காந்தியை கைது செய்ய வேண்டும்: திருமா
கண்ணாடி வீடு. கல்லு. கவனமிருக்கட்டும். கூட்டணில இல்லன்னா கத வேற.
_____________________________________________________________
பிரபாகரனை ஆதரிக்கும் ராமதாஸ்-எதிர்க்கும் ஜெ.:கலைஞர்
உங்க கத என்னா? 50:50?
_____________________________________________________________
இலங்கை போர் பகுதியில் 2 லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்: ஐரோப்பிய மனித நேய ஆணையம்
இத சொல்றதுக்குதானா நீங்க? அதான் கத்துனமே. இவங்கள என்ன பண்ண உத்தேசம்?
____________________________________________________________
இலங்கை பிரசனைக்குஅமைதி வழியில்தீர்வு:அமெரிக்கா
சூபரப்பு. வாயே தொறக்காம இருந்தா மொத்தமா போய்ட்டா பயங்கரவாதம் ஒழிந்தது. இல்லாம தோக்குறா மாதிரி பக்சே இருந்தா ஜனநாயக முறையில் பேச்சு வார்த்தை. ஆமாம் இந்த இறையாண்மைல்லாம் கிடையாதா?
____________________________________________________________
ஈழஅவலம்: மக்களும் செத்துவிட்டார்கள் - மருந்துகளும் கெட்டுவிட்டது?
ஆஹா! அப்படிப்போகுதா கத. எப்படியும் சாவடிக்க போறது. இதுக்கெதுக்கு சாப்பாடு, மருந்தெல்லாம்னு விட்டதாக்கும். நல்லா இருங்கடா.
___________________________________________________________
திமுகவின் தலைவர் பதவிக்காக பேராசைப்பட்ட தம்பி:கலைஞர் கவிதை
இந்த சாக்குல ஸ்டாலினுக்கு தான்னு சொல்லிட்டியே தலிவா. உன்ன அடிச்சிக்க ஆளே கிடையாது.
____________________________________________________________
அரசியல் வியாபாரம் செய்கிறது பா.ம.க.: காங்கிரஸ்
அதெப்பிடி பண்ணலாம். ஏக போக உரிமை இவங்களுக்குதானே? மவனே ரிஸல்ட் வரட்டும்டி. பார்க்கதானே போறோம்.

கத கேளு கத கேளு - 5

கதை சொல்லி நாளாச்சி. சொல்லுவமா. நமக்கு ஈசாப்தான் சரி.

ஈசாப் ஒரு அடிமைன்னு சொல்லி இருக்கேன்ல. அந்தாளோட முதலாளி ஒரு வியாபாரி. அரேபியால வருசத்துக்கு நாலுவாட்டி வேற வேற ஊர்ல போய் வியாவாரம் பண்றது. அப்பிடி போக ஏற்பாடு. சாமான் சட்டிஎல்லாம் கட்டி வெச்சு அவங்கவங்க எத தூக்கறதுன்னு போட்டா போட்டி. சண்டியர்லாம் அடிச்சி புடிச்சி சின்ன சாமானா எடுக்க நம்ம ஈசாப் நோஞ்சான். ஒதுங்கி நின்னிச்சி. அடிபிடி கொஞ்சம் ஓய ஈசாப் ஒரு பெரிய மூட்டய எடுத்து வச்சாங்க. மத்த பேரெல்லாம் அட முட்டாப்பயலே. ஈர்க்குச்சி மாதிரி இருந்துண்டு இத போய் தூக்குதாம். வழிலயே சாவப்போறான்னு கேலி பேசி ஒரு வழியா கிளம்பிட்டாய்ங்க.

இந்த பாரம் இருக்கே. அது தூக்கறப்ப 5 கிலோ இருந்தா 10 நிமிஷம் நடக்கவே 10 கிலோ மாதிரி தெரியுமில்லயா? ஈசாப் தூக்க முடியாம தூக்கிகிட்டு தள்ளாடி போக மத்ததெல்லாம் நக்கலு. ரெண்டு மூணு நாள் போக தான் தெரிஞ்சது. ஒண்ணு மூன்ச ஒண்ணு பார்த்துண்டு, ஆகா ஏமாந்துட்டமேடான்னு. முக்கால் தூரம் கடக்க முதலாளியும் ஈசாப்பும்தான் கை வீசிண்டு நடக்கறாங்க. மேட்டர் என்னான்னா ஈசாப் தூக்கினது சோத்து மூட்டை. சாப்பிட சாப்பிட குறைஞ்சிண்டே வந்து ஒரு கட்டத்தில பாரமே இல்லாம போச்சி. பாடி வீக்குன்னாலும் மாடி ஸ்ட்ராங்குடா பயபுள்ளைக்குனு நொந்து போனாங்களாம்.

(நீங்களா கேப்டன் தனியா 40 இடத்துலயும் போட்டி போடுறத வெச்சி எல்லா சீட்டும் அந்தாளு லவட்டிண்டு போய்டலாம்னு இந்த கதய சொல்றியான்னு சண்டைக்கு வறாதிங்க. நான் கதை சொன்னேன் அவ்ளோதான்)

Friday, March 27, 2009

லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல - 5




நன்றி: நான் சத்யா



முத்துக்காள: யோவ். வெயிட்டர். இங்க வாய்யா.

வடிவேல்:(அட எளவெடுத்தவனே. கோழி 65னு என்ன சாவடிச்சனாச்சே இவன். இங்கயும் வந்துட்டான்!) என்னா வேணும்?
இங்க பாரு இப்பதே சொல்லிட்டேன் நம்பர் போட்ட ஐட்டம் எதுவும் இங்க விக்கறதில்ல.

முத்துக்காள: அட என்னண்ணே நீங்க பழசெல்லாம் மனசுல வெச்சிகிட்டு. ஆப் பிராந்தி ஒரு கூல்டிரிங்க் கொண்டு வாங்கண்ணே.

வடிவேலு: ஏண்டா. இதுல வில்லங்கமெதுவுமில்லையே.

முத்துக்காள: ஏண்ணே மிரள்ர. ஆப் பிராந்தி இதில வில்லங்கமிருக்கா? கூல்டிரிங்க் அதாவது குளிர்பானம் இதில இருக்கா? போய்கொண்டாங்கண்ணே. தொட்டுக்க கூட ஒண்ணும் கேக்கல போறுமா. போங்க.

வடிவேலு: இந்தாடா. பில்லு. காச எடு.

முத்துக்காள: இந்தாங்கண்ணே. காசு சரியா இருக்கா. இப்போ பிராந்தி இருக்கு, பானம் இருக்கு குளிரு எங்க சொல்லுண்ணே. அப்பதான் பிராந்தி அடிக்க சரியா இருக்கும்.

வடிவேலு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..ஏண்டா இப்படி சுத்தி சுத்தி விரட்டி சாவடிக்கற‌
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-------------------------------------------------------------------------------------------------
வடிவேலு: ஏம்பா. துப்பாகி சுடுறபோட்டில துப்பாக்கில எதையோ மாட்டி கொள்ள நேரம் அதுல பாத்து சுடுறாய்ங்களே. அது என்னா?

சத்யராஜ்: அது டெலஸ்கோப்டா வெண்ண. குறி பாக்குறதுக்கு.

வடிவேலு: அப்றம் என்ன போட்டி?. நேர கிட்ட போய் நின்னு சுடவேண்டியது தான. நம்ம ஊர்ல ஒரு ஆலமரம். அது கீள ஒரு 20, 25 குறவங்க பேமிலி. மொத்தமா கூடி உக்காந்து பேசிக்கிருப்பாய்ங்க. பேசிக்கிட்டே பகல்ல பசுமாடு தெரியாத ஒரு பெருசு படுக்கவெச்ச துப்பாக்கிய நிமித்தி டும்னு ஒரு போடு. பத்து காக்காயாவது விழும். பத்து நிமிசத்தில மொத்த பேமிலிக்கும் பிரியாணி. சுட்றதுன்னா அது. இப்பிடி டுபாக்கூரு வேல பண்ணி சுடுறதுக்கு மெடல் வேறயா?
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-------------------------------------------------------------------------------------------------
வடிவேலு: ஏம்பா. வரப்ப என்ன சொல்லி கூட்டியாந்த. பாரின்ல மக்கள்ளாம் நேர்மையானவங்க. கடைல ஆளில்லன்னா கூட தேவையானத எடுத்துகிட்டு காச வெச்சிட்டு போவாய்ங்கன்னு சொன்னல?

சத்யராஜ்: அதுக்கெனாடா இப்போ.

வடிவேலு: அங்க பாரு. போட்ல போக காசில்லாம ஒருத்தன் அந்த போட்ல கயத்த கட்டி ஒரு கட்ட மேல நின்னுகிட்டு ஓசில போறத. அந்த குருட்டு கபோதி இது தெரியாம வேகமா போறான்.

சத்யராஜ்:ஓடிபோயிரு.
‍------------------------------------------------------------------------------------------------


Thursday, March 26, 2009

லொள்ளுவதெல்லாம் லொள்ளல்ல - 4

வடிவேலு: அய்யோ! நான் என்ன பண்ணுவேன். என்ன பண்ணுவேன். ஓட்ட பிரிச்சிரிவாய்ங்க உசாரா இருங்கன்னு ஓட்டுமேல உக்காந்து சொன்னேனே. கேட்டியளா. எத்தன பேருகிட்ட அடிய வாங்கி உதய வாங்கி அங்க இங்க கடிய வாங்கி நண்டு சிண்டுகிட்டல்லாம் நாறிபோன நானு இந்தாளுக்கு பயந்து ஓட்டுமேல உக்காந்தப்ப யோசிக்க வேணாமா. காமெடியன் சொல்றான்னு கண்டுக்காம கேப்டன விட்டுட்டிங்களே. மதுரக்காரன அந்தூருக்காரனுக்கு தான தெரியும். அத்தன பேரும் வெள்ளந்தியா இருந்துட்டாய்ங்களே.

தலிவர்: மன்னிச்சிக்கப்பா..

வடிவேலு: அய்யா.அய்யா. அந்த வார்த்தைய சொல்லிறாதிங்க. அந்தாளுக்கு அந்த வார்த்தய பிடிக்காது. நாள பின்ன வெளீய இருந்து தர ஆதரவும் தரமாட்டாருய்யா..

வடிவேலு: ஹூம். என்னா முத்துக்காள. சோகமா உக்காந்திருக்க. எலக்சன் வேற வருது. தெம்பா இருக்க வேணாமா. ஓடி ஆடி இருந்தா நாலு காசு பார்க்கலாமில்ல‌

முத்துக்காள: அட போண்ண. உங்கிட்ட வாங்கின காசுக்கு உன் சின்னத்துல ஒரு குத்து, அவன் குடுத்த காசுக்கு அவன் சின்னத்துல ஒரு குத்துன்னு வஞ்சன இல்லாம வளர்ந்தவண்ண நானு.இப்போ போய் மிசின கொண்டு வந்து வெச்சி ஒரு வாட்டிதான் அமுக்க முடியும்னா வாழ்ந்து என்னா பண்ண?

வடிவேலு: ய்ய்ய்ய்யூ யூப்லடிஃபூலாபனிடயடாபனேஸ்.

பார்த்திபன்: ஏய். இங்கவா. என்னா சொன்ன திருப்பி சொல்லு

வடிவேலு:என்னாது? திருப்பி சொல்லவா. இது நீ சொன்னா மாதிரி திருப்பி சொல்ல தமிழில்ல. இங்கிலீசு.

பார்த்திபன்: நீ அப்படி திருப்பி சொல்ல வேணாம். சொன்னத அப்டியே திரும்ப சொல்லு.

வடிவேலு: தம்பி. அர்சன்டா ஒரு வேல இருக்கு. நீ இங்கயே இரு. வந்து சொல்றேன். வர்ட்டா.

பார்த்திபன்: இப்ப சொல்றியா. உன் மச்சான கூப்டவா.

வடிவேலு: ஏன்யா ஏன். ஏன் என் உசிர எடுக்கற. எந்தப் படத்துல எப்ப சொல்ல சொல்லுவாய்ங்கன்னு தெரியாம சும்மா இருக்கற‌ நேரமெல்லாம் சொல்லி சொல்லிப் பார்த்துக்கிருக்கேன். டக்னு சொல்லுன்னா எப்டி சொல்றது.

சத்யராஜ்: வடிவேலு. இப்பவே சொல்லிட்டேன். டென்னிஸ் மேட்ச்ல வந்து கூப்பாடு போட்டா வெளிய இளுத்து விட்றுவாங்க. பொத்திக்கிட்டு மேட்ச பாரு.

வடிவேலு: ப்ஸ்ட். அண்ணே. காத கொண்டு வாங்க. கத்தாம சொல்லுறேன்.

சத்யராஜ்: என்னாடா

வடிவேலு:அந்த வெள்ளக்கார சிறுக்கிய பார்த்தியா. உசரக்க உக்காந்து என்னா வேல பண்ணுறா. ஆடிகிருக்காய்ன்ல அந்தால உசரக்க ஒரு நெட்டயன். அவன்மேல அவளுக்கு லவ்வு போல. 15, 30னு சொல்லிட்டு கூச்சமில்லாம லவ்வுங்குது. இந்தக் கேனச் சிறுக்கன் அது புரியாம ஆடிக்கிட்டே இருக்கான்.

வடிவேலு:அடப்பாவி. இத்தன பேர இளிச்சவாப் பயலாக்கிட்டாண்ணே இந்த பார்த்திபன்.

சத்யராஜ்:என்னாடா உளர்ற‌

வடிவேலு:நானா உளர்றேன். அந்த பாவி பஸ்ல என்ட சொன்னா மாதிரி ப்ளேன்ல டிக்கட் வாங்கலைன்னா பாதில‌இறக்கி விடமாட்டாங்கன்னு கொள்ள பேத்துகிட்ட சொல்லி ஏமாத்திருக்கான் போல. பரதேசி பயபுள்ளய நம்பி ப்ளேன்ல ஏறிட்டு இப்போ பாரு. அம்புட்டு பயலயும் பாதில இறக்கி விட்டுக்கிருக்காய்ன்

சத்யராஜ்: அட நாசமா போனவனே. இது பாரா ஜம்பிங்டா.

Wednesday, March 25, 2009

பதில் கேள்வி

சிறிது நாட்களாக நம் தமிழினக் கோவலர் சாதுர்யமாக மற்றவர்களைக் கேட்கவிட்டால் சங்கடம் என்று தானே வசதிக்கு கேள்வி கேட்டு தானே அருமையாகபதிலும் சொல்லி காவடிப் பத்திரிகைகளில் போட்டு காதில் பூ சுத்தி வருகிறார். மூத்த தலைவர் என்ற நினைப்பு சிறிதுமின்றி எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போகமுடியுமோ அவ்வளவும் பேசும் இவரின் இன்றைய கேள்வி பதிலைப் படிக்கும்துர்பாக்கியம் நமக்கெல்லாம் வாய்த்தது. பண்பு நாகரிகம் குறித்து பேசுவதற்குஎன்ன தகுதி இதற்கு மேலும் இருக்க முடியும். நீங்களே பாருங்கள்.

1. இறையாண்மையை காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை அலட்சியப்படுத்த நானும் சரி- தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை

வாஸ்தவம். அலட்சியப் படுத்த வேண்டுமென்றால் அது குறித்து ஒரு உணர்வாவது வேண்டும்.

2.இறையாண்மை, ஒருமைப்பாடு இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத் தான்- அவற்றுக்கு மாறாக செயல்பட்டாலோ, பேசினாலோ, எழுதினாலோ சட்டம் கொட்டும் என்று ஒரு நிலை உருவாக்கப்பட்டிருப்பதால்....

ஆமாம். காவிரி நீர் தர மறுப்பவனுக்கு மட்டும் இவை இல்லை. அங்கு யாராவது ஒருமைப்பாட்டுக்கு இறையாண்மைக்கு எதிராக தண்ணீர் தர மறுப்பது தவறு என கைது செய்யப்பட்டிருக்கிறார்களா. இங்கு கூவும் தொங்க பாலு இது இறையாண்மைக்கு மாறில்லை எனக்கூறி ஓட்டு கேட்கட்டும். அவரெதற்கு ? நீங்கள் சொல்லலாமே? இதைக் கேட்டவர்கள் தான் சிறையில்.

3. இலங்கை தமிழர் பாதுகாப்பு அணியிலே உள்ள தளகர்த்தர்கள், சேனாதிபதிகள், வழிகாட்டிகள்- இவர்கள் எல்லாம் இப்போது சமீப காலமாக இலங்கையிலே உள்ள முல்லைத்தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி பற்றியோ பேசுவதில்லை.

பிரமாதம். ஐயா. இப்போது சாவதெல்லாம் புதுக்குடியிருப்பில். நீங்கள் சொல்லுமிடமெல்லாம் உங்கள் கூட்டணி தயவில் பிடித்து விட்டதாக( ஓர் இரு நாய்கள் தவிர ஏதுமில்லை அங்கே). இதிலிருந்தே நீங்க எவ்வளவு தூரம் அக்கரையாக கவனிக்கிறீர்கள் எனத் தெரிகிறது.

4. அவர்களுடைய பிரச்சினை எல்லாம் திருநெல்வேலி தொகுதி யாருக்கு? திருச்சி தொகுதி யாருக்கு? சிதம்பரம் தொகுதி யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? ராஜ்ய சபையும் சேர்த்தா? சேர்க்காமலா?

நாளைக்கு தானே நல்ல நாள் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் பிரச்சனை வராமலா போகப் போகிறது?

5. மேடையேறி பேசுகின்றவர்களையெல்லாம் "இறையாண்மை'' மீறுகிறார் என்று காரணம் காட்டி தமிழ்நாட்டில் யாரும் கைது செய்யப்படவில்லை. சொல்லப் பட்ட காரணங்களில் இறையாண்மைக்கு விரோதம் என்பதும் ஒன்றாக இருக்கலாம். காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியாதவர்கள் எல்லாம் "வேசி மக்கள்'' என்றும்- இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினி இறந்துவிட்டான், ஆனால் சேலை கட்டி வந்த முசோலினிதான் சோனியா என்றும்- ராஜீவ்காந்தி கொலை செய்யப்படவில்லை, அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்றும் இப்படியெல்லாம் பேசுவதுதான் மேடை நாகரிகம்- அரசியல் பண்பாடு என்று கருதினால்- அப்படி பேசியவர்கள் கைது செய்யப்பட்டது நியாயம் அல்ல என்று நீங்கள் வாதிடுவதிலே எந்த பயனும் இல்லை.

இவ்வளவு பச்சையாக இல்லாவிடினும் அந்த பதிவிரதை அறிக்கை இறையாண்மை மீறல் இல்லையா?
புடவைகட்டிய முசோலினி இறையாண்மை மீறல் என்றால் அம்மையாரை அர்ச்சித்ததெல்லாம் மீறல் இல்லையா?
உங்கள் கருத்துப்படி மரணதண்டனை என்று சொன்னது இறையாண்மை மீறல். சரி. இந்திரா அம்மையார் மரணத்தைத் தொடர்ந்து சீக்கியர்கள் கொல்லப் பட்டபோது ராஜீவ் சொன்ன ஆலமர உதாரணம் என்ன? ஆக ஆளும் கட்சிக்கு எதிராக சொல்லப் படும் கருத்துக்கள் இறையாண்மைக்கு மாறு. அவ்வளவுதானே?

6. இவர்கள்தான் இலங்கை தமிழர்களைக் காப்பாற்றும் அந்த கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள்- முழங்கட்டுமே முரசம்- கொட்டட்டுமே பேரிகை. இலங்கை நோக்கி ராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?

அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம். இந்த இலங்கை மீது படையெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு- அவரையும் அழைத்து செல்லுங்கள். அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று- அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.

உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா. இப்படி கேலி பேசும் விடயமா இது. ஏன் அப்போது கூட நாங்களும் வரத் தயார் என சொல்ல முடியாதா? களிப்பீர்கள். கை தட்டுவீர்கள். எவ்வளவு அழகான திட்டம். ஒரே போட்டில் தமிழுணர்வாளர்களையும் சேர்த்து ஒழிக்க. ஓட்டு போடவாவது மக்கள் வேண்டும் ஐயா. அய்யா அய்யகோ. முடியுமானால் மேற்சொன்னவற்றை ஒரு முதல்வராக, மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் உறுதியோடு நீங்கள் போங்கள். ஒன்றும் செய்ய மாட்டோம். திரும்பி வந்தால் எப்படி போனீர்கள் என்ற கேள்வியுமிருக்காது என்று உறுதி மொழியாக கூறிப் பாருங்கள். போஸ்டர் ஒட்ட உங்கள் கட்சியிலே கூட தொண்டர்களிருக்க மாட்டார்கள்.
எல்லோரும் அங்கே இருப்பார்கள்.
வேண்டாம். ஐயா. ஏதாவது செய்ய முடியும் நிலையில் இருந்தும் செய்ய மறுப்பது பெரும்பாவம். முடியுமானால் அந்த அவலங்களை வலைமனையில் பார்க்க மனதைரியமிருந்தால் பாருங்கள். இதோ. உங்களை வாழ வைக்கும் தமிழிலேயே அந்த அவலத்தை கேளுங்கள். இப்படி பேசியதற்கு அழுங்கள்.

Tuesday, March 24, 2009

லொள்ளுவதெல்லாம் லொள்ளல்ல - 3

வடிவேலு: ஏன்யா அம்பயரா. எங்கள பார்த்தா எப்படி தெரியுது. அங்கிட்டு அடிக்கிறவன் பக்கம் இருக்கிற அம்பயரன பார்த்தல்ல. அடிக்க இடஞ்சலில்லாம எங்கிட்டு நின்னு மேட்ச் பாக்குறான். இந்தா மூணாவது தடவ‌. போட விடுறியாய்யா? நான் வரனானு திரும்பி திரும்பி பார்த்து சரியா போடப் போற நேரத்துல பக்கத்துல வந்து பாலுக்கு முண்ட்ற கன்னுகுட்டி மாதிரி மூஞ்ச நீட்ரியே மூதேவி. நான் மட்டும் உசாரா நிப்பாட்டாம எரியப்போய் எசகு பிசகா எங்கயாவது படாத இடத்தில பட்டா கொலக்கேசு ஆகிப்போகுமா இல்லயா? போய்யா. போய் அங்கிட்டு நின்னு பாரு. இல்லன்னா அந்த அம்பயரன இங்க வரசொல்லு. இதுல வேற மறிச்சிட்டேன்னு கைய கைய ஆட்டி டேன்ஸ் வேற. சின்னப்புள்ளத் தனமா .

வடிவேலு:அய்யய்யய்ய. என்னய்யா அம்பயரா. ஏன்யா இப்படி என் உசுர வாங்கர. ஈரக்கொல தள்ள ஒடியாந்து பந்து போட்டன்ல. அவன் அடிச்சான்ல. நான் புடிச்சனா இல்லியா. நீயே அவுட் குடுக்கணும். நீ தரலன்னு நான் கேட்டா நோபாலுங்கற. இந்தா இருக்குய்யா பந்து. நான் போய் கடைல வாங்கிட்டா வந்தேன். அவுட்டு குடுய்யா.

அம்பயர்: யோவ். போட்றப்போ கால் கோட்டுக்கு வெளிய இருந்திச்சி. அவுட் இல்ல போய்யா.

வடிவேலு: அட கிறுக்குப்பயலே. அப்ப்டின்னா நோ கால்னு வெளங்கறாப்பல சொல்ல வேண்டியதுதானாய்யா என் வெண்ட்று. வெளங்கிக்கிறுவமா இல்லையா? நோபால்னு ஏன்யா குழப்பற‌?

வடிவேலு: நானும் பாக்கறேன். கப்பல் மாதிரி காருல வராய்ங்க. ஒண்ணுக்கு ஆறேழு மட்ட. அத தூக்க ஒரு ஆளு. ஒருத்தனும் அடிச்சமா குழிக்குள்ள போட்டமான்னு ஆடுறான்ல. மண்ணுல அடிக்கறதும், தண்ணில அடிக்கிறதும் அங்கங்க பொருக்கி பொருக்கி பத்து வாட்டி தட்டி பொந்துக்குள்ள போட்றதும். சாண் தூரத்துல இருக்கறத தள்ளி விட்றதுக்கு ஓணான் பிடிக்கிறவன் மாதிரி என்னா பிலிமு. அறுக்க மாட்டாதவன் இடுப்பில அம்பத்தெட்டு அறுவான்னு இதுக்கு ஆறேழு மட்ட வேற.

சத்தியராஜ்: யோவ் கோல்ஃப்னா என்னா தெரியுமாய்யா?

வடிவேலு:யாரு. எங்களயா கேக்குறிய. இதெல்லாம் நாம அரடவுசர் காலத்திலயே ஆடிட்டம்டி. இந்த மாதிரி புல்லு தரையெல்லாம் கிடையாது. ரோட்டுல கமர்கட் சைசுல கண்ணாடி குண்டு. உருட்டி விட்டு குழில விளுகலன்னா முழங்கைலயே தள்ளி தள்ளி போடணும்டியோ. ரத்தக்களறி ரணக்களரி ஆய்போகும். அவ்ளோ டஃபு. பட்டணத்துல மட்டய வெச்சி புல்லுல ஆடி புரியாத பேர வெச்சிட்டா? நம்ம கிட்டயேவா. அய்யோ. அய்ய்ய்ய்யோ.

வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. யோவ் நிப்பாட்ட சொல்லுய்யா மேச்ச. அழுவுணி ஆட்டம் ஆடப்பாக்கராய்ங்கப்பா.

சத்யராஜ்: யோவ். ஏன் கூவர. என்னாச்சி

வடிவேலு: என்னாச்சா. அங்க பாரு. பச்ச சட்ட போட்ட பந்து புடிக்கிறவன் அந்த பக்கம் தான நின்னான். சிவப்பு சட்ட காரன் இந்தா பீச்சாங்கை பக்கம். சாப்ட போயிட்டு வந்து இப்போ பாரு. அவன் நல்லா புடிக்கிறான்னு காச குடுத்து மாத்தி நிக்க வெச்சிட்டான் போல. விட்றுவமா?

சத்யராஜ்: யோவ் ஆஃப் யா. இது தெரியாம ஃபுட்பால் மேட்சுக்கு வந்து ஏன்யா எள‌வெடுக்கற?

வடிவேலு: அட நாறப்பயலுவளா. பாதிமேட்சுல ஏன்யா ஆஃப் அடிச்சிட்டு இப்பிடி மாறி நிக்கிறது. ஆட்டதுல தோல்வி வெற்றில்லாம் சகஜம் தேன். ஆடி முடிச்சி தோத்தா துக்கத்துக்கு செயிச்சா சந்தோசத்துக்கு ஃபுல்லே அடிச்சிட்டு போக வேண்டியது தானே.

நறுக்குன்னு நாலு வார்த்த - 15

சோனியா போட்டியிட தடை விதிக்க வேண்டும்:சு.சாமி

இவரு வாய தொறக்கவே தடை விதிக்க வேண்டும்.

அமைச்சர்கள் அன்புமணி, வேலு ராஜினாமா செய்யவில்லை: பாமக

அடுத்த மந்திரி வந்தப்புறமும் ப்ளீஸ் இன்னும் ஒரு நாளைக்கு இருந்துக்கறோம்னு கேக்காம இருந்தா சரி. யப்பா. உட்டா உதாரெல்லாம் என்னா?

உரிய அரசியல் பங்கு வழங்கும் கட்சியுடன் கூட்டணி: புதிய தமிழகம்

அட பாவிங்களா. இவ்ளோ ஓபனாவா கேப்பீங்க?

எதையும் எதிர்பார்த்து திமுகவுக்கு வரவில்லை: கண்ணப்பன்

எங்கப்பனும் குதிருக்குள்ள இல்லைங்ணா.

எம்ஜிஆரை தவிர எந்தவொரு நடிகரும் முதல்வராக முடியாது: அதிமுக

நடிகைதான் ஆக முடியுமா?

தமிழக மக்கள் கைகாட்டுபவர்களே ஆட்சி அமைக்க முடியும்: ப.சிதம்பரம்

ரொம்பதான்யா கொழுப்பு இந்தாளுக்கு. இளிச்சவாப் பயலுகனு எப்டி சொல்றாரு அய்யா.

ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற கலைஞர் முன்வர வேண்டும்: ராமதாஸ்

ஆமாம். இனிமேலாவது கழுத்தறுக்காம இருந்தா போரும்னு தான் எதிர்பார்க்கறாங்க.

புலிகளின் சகல போராளிகளூக்கும் மன்னிப்பு வழங்கப்படும்: கெஹலிய ரம்புக்வெல்ல

அட சீ போடா. உன்ன யாராவது கேட்டாங்களா? மாயவரம் ரெண்டு டிக்கட்னு கூவறாமாதிரி இருக்கு.

ம.தி.மு.க. என்றால் மறுபடியும் தி.மு.க.: கலைஞர்

தி மு க என்றால் திராவிடர்களை முட்டாளாக்கிய கட்சியா? பேராச போவுதா பாரு. டேக் ஓவர் பிட்டா நைனா. இல்ல வைகோவ உள்ள தள்ளி கட்சிய கபளீகரம் பண்ற ஐடியாவா.

காங். - லல்லுபிரசாத் கூட்டணி முறிந்தது

தில்லுபிரசாத்.

மன்மோகன்சிங் தான் மீண்டும் பிரதமர்: சோனியா

இதெல்லாம் ரொம்ப ஓவரு. சும்மாவே அந்தாளு பேச மாட்டாரு. இப்போ சர்ஜரி வேற. வாயே தொறக்காம இருக்க வேற ஆள் தேவையா?

காங்கிரஸ் கூட்டணிக்கு பா.ம.க. வரும்: தங்கபாலு

மருத்துவர் நாடி பிடிக்காம வைத்தியம் பார்க்க மாட்டாரு தொங்கு

மார்ச் 26ல் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிப்பு: செய்தி

பகுத்தறிவா. புடலங்காயா. தேர்தல்மா தேர்தல். நாளு, நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் பார்த்து நிறைஞ்ச அமாவாசைலதான் நடக்கும். கொள்ள அடிக்க புறப்பட்டா பவுர்ணமில பண்ணமுடியுமா?


Sunday, March 22, 2009

எக்குதப்பா எட்டு கேள்வி

கலைஞராண்ட:

ஈழத்தமிழர் துயர் துடைக்க என்னமோ ஐடியா குட்துகிறியாம். சொக்கு சொக்கி போய் நிக்குதாம். துணி குட்துட்டேன், பாத்ரம் குட்துட்டேன், கலர் டி வி காமெடி சேனல் வராமாதிரி குட்தா சுத்தமா தொட்சில்லாம்னு எதுனா சொன்னியா?

ஜெ யாண்ட:

யம்மாடி. கொடைக்கானல்ல எஸ்டேட் வாங்கினா கொட்சல் குடுக்கறாங்கன்னு இலங்கைல வாங்கி போட்டா வசதின்னு அட்சதில்ல தான இந்த பல்டி?

ம‌ருத்துவ‌ராண்ட:

நாங்க நோக்காடுன்னு வந்தாகண்டி 48 மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லுவீங்க. கூட்டணி என்னா கோமா கேஸா அய்யா? இன்னும் வாயே தொறக்க மாட்றிங்க?

திருமாவாண்ட:

பாவம்பா. நீ உண்ணாவிரதம் இருந்தப்போ எவ்ளோ நம்பி அந்த புள்ளைங்க கடுதாசு எழுதிச்சிங்க. அது கூட கவனம் வர்லல்ல உனுக்கு. இப்பிடி நம்பிக்கை மோசம் பண்ணிக்கினு அந்தாளு என்னாமா கிழிக்கிறாரு. இங்க கெடந்தே ஆப்பு வைக்கலாம்னு கூப்டுறியே பா மருத்துவர. நாயமா இது?


லல்லுவாண்ட:

3 சீட் தான் தருவேன். அது கூட உனக்கு பவுசில்ல. எட்தா எட்துக்கோ. இல்லாங்காட்டி உடுன்னு சோனியாக்கு சொல்டியேப்பா. நீ ஏம்பா லல்லு பேர தில்லுனு மாத்திக்கல?


மகிந்தாவாண்ட:

சுத்தி சுத்தி லாடம் கட்றானுங்கோ. கல்யாண மாப்ள மாதிரி கசங்காம கொள்ளாம சிர்சிகினேகீறியே. எவனோ சண்ட போடறான். யாரோ சாவறான். கெலிச்சா இங்க. இல்லாட்டி ஓடி பூடலாம்னா?

பான் ‍ கி மூனாண்ட:

ஆயுதம் குடுத்த சப்ப அஜெண்டால சேர்க்க விடலன்னு அப்பாவி ஜனங்க உசிர அமுக்கிட மாட்ட தான ஐ நா சப்ப?

தொங்கபாலுவாண்ட:

சொட்ட பெர்சா வெச்சினுக்கறாண்டா. எவ்ளோ பெரிய நாமம் போட்டாலும் தாங்குவான். இவன் ரொம்ப நல்லவன்னு மக்கள் சொல்றது கேக்குதா?

Saturday, March 21, 2009

இப்படியும் யோசிப்பாய்ங்களோ?

கலைஞர்:

தமிழ செம்மொழின்னு சொல்ல வெச்சத இப்படி ரத்த ஆறு ஓட துணை போனதாலதானான்னு கேட்றுவாய்ங்களோ?

ஏப்ரல் 14குள்ள ஈழத்த ஒழிச்சி கட்டணும்னு சொக்கு சொன்னதா நீயூசெல்லாம் வருதே! இதனால தான் நான் தமிழ் வருடம் பொங்கல்ல இருந்துனு மாத்திட்டேன். உள் கைன்னு சொல்லிடுவாய்ங்களோ?


திருமா:

அந்த அணியா இந்த அணியான்னு முடிவெடுக்காம இழுபடுறதால விடுதலைப் பூனைன்னு சொல்லிடுவாய்ங்களோ?



ராமதாஸ்:

டக் டக்னு யார் கூட வேணும்னாலும் கூட்டணின்னு போறதால ப.ம.க. 'ஓ' குரூப்பான்னு கேட்றுவாய்ங்களோ?

நம்ம கூட்டணி தோத்தாலும் எனக்கு தெரியாது. நான் மந்திரியாதான் இருப்பேன். கூட்டணி மாத்துன்னு அன்புமணி கேட்றுவாய்ங்களோ?


ஜெ:

இந்த கிறுக்கன் சுவாமி ஒரு வேள 40 தொகுதிலயும் ஜெயிச்சா பிரதமர் பதவி வாங்கி குடுத்து மாட்ட வெச்சா பக்ஸேட பேசி தனி நாடு வாங்குன்னு கேப்பாய்ங்களோ?

அவங்களே அடைஞ்சிட்டா அழைப்பு குடுத்து அங்க வந்தா ஈழத் தமிழ்நாடுன்னு தான் சொல்லணும்னு சொல்வாய்ங்களோ?


விஜயகாந்த்:

இப்போதான் உங்க அணில இருக்கேனே கலியாண மண்டபம் மேட்டர் பாருங்கன்னா கலைஞர் காங்கிரஸ காங்கிரஸ் கலைஞரன்னு கை காட்டுவாய்ங்களோ?

நாம ஒரு தொகுதில நின்னா இந்த கிறுக்குப் புடிச்ச வடிவேலு சொன்னா மாதிரி டெபாசிட் இல்லாம பண்ணிடுவாய்ங்களோ?


சுவாமி:

ஒரே மேடைல என்னையும் சோவையும் ஏத்தி விடுவாளோ. அந்தாளு கண்ண பார்த்தாலே நேக்கு முட்டை கவனம் வந்து சேர் பின்னாடி ஒளிஞ்சிப்பேனே?


ஈழத்து சனங்க:

எங்களுக்கும் கடவுள் கண்ண தொறந்து எங்க நாடு எங்களுக்கு கிடைச்சா எங்க ரத்தம், எங்க உயிர், எங்க வீரம், எங்களுக்காக உயிரைக் குடுத்த தம்பிமார் தியாகம் எல்லாம் ஒண்ணுமில்ல. எங்களால தான்னு எடுபட்ட பயலுவள்ளாம் ஒண்ணாக் கூடி கூத்தடிப்பாய்ங்களோ?


இங்கத்து சனங்க:

உள்ளுக்குள்ள குமுறி குமுறி ஒண்ணும் பண்ண மாட்டாம சாவறது தெரியாம, இப்படி ஒரு பிழைப்பு தேவையாடான்னு கேட்றுவாய்ங்களோ?

Friday, March 20, 2009

லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல - 2

பார்த்திபன்:ஏய். இரு. எதுக்குடா உன் நண்பன‌ அடிச்சியாம்?

வடிவேலு: யோவ். அவன் என்னா பண்ணான் தெரியுமாய்யா? மார்ல வலியா இருக்குடா மாப்ள. நல்ல பெசலிஸ்ட் யாராச்சும் தெரியுமாடான்னு கேட்டா, கேப்டன் கிட்ட போ. அந்தாளுதான் செல்போன் வெளிச்சத்துலையே ஹார்ட் ஆபரேசன் பண்ணுவாருங்கறான். அவன அடிக்காம என்ன பண்ணச் சொல்ற?


அர்ஜுன்: வாய்யா ஏட்டு! என்ன ஹைவேஸ்ல அடி பட்ட தெருநாய் மாதிரி நைஞ்சி பஞ்சாகி வர?

வடிவேலு: அட சும்மா இருப்பா. சீமான் தம்பிய பார்க்கலாம்னு போனேன். வாங்கண்ணே! என்ன நிலவரம்னாய்ங்க. நான் சொன்னேன். எல்லாம் நல்லாதான் போயிக்கிருக்கு தம்பி. பயக புகுந்து விளையாடுறாய்ங்க. என்னா நினைச்சிருக்கான் ராணுவத்தான் நம்ம தம்பிங்கள. சிங்கம்லனு சொல்லி வாய் மூடல. நச்னு கம்பிக்குள்ளையே கையவிட்டு மூக்குல ஒரு குத்து. அப்புறம் தான் அங்க வந்த அமீர் தம்பி சொல்லிச்சி. சிங்கம்னா சிங்களத்தானாம்.


வடிவேலு: டேய்! ஆடு வளக்குறது அழகு பார்க்க இல்ல. கோழி வளக்குறது கொஞ்சரதுக்கில்ல. அறுக்கதான்.

பார்த்திபன்: அப்ப நாய் வளர்க்குறது எதுக்குடா நாறப்பயல?

வடிவேலு: வந்துட்டான்யா. வந்துட்டான்யா.


சத்தியராஜ்: என்னா மாப்ள! எலக்ஷன் வந்தாச்சி. கேப்டன் எங்க நின்னாலும் சுயேச்சையா நின்னு டெபாசிட் இல்லாம தோற்கடிப்பேன்னு சவால் விட்டியே? என்னா பண்ணப்போற?

வடிவேலு: சவாலா? என்னங்க சின்னபுள்ள தனமா பேசிக்கிட்டு. நான் எங்க சொன்னேன் அப்படி?

சத்யராஜ்: அடப் பார்ரா. சொன்னது பேபர்ல கூட வந்திச்சே?

வடிவேலு: அது நாற வாயி. இது வேற வாயி. போவியா. எப்பவோ சொன்னதெல்லாம் இப்போ கேட்டுகிட்டு.

Thursday, March 19, 2009

லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல

வடிவேலு: ம்மா..ம்மா.
சத்யராஜ்: அட.என்னடா மாப்ள சின்னாபின்னமான சிங்கள சிப்பாய் மாதிரி வர. என்னாச்சி.
வடிவேலு: அத ஏனப்பா கேக்கற. நாம்பாட்டுக்கு போய்க்கிருந்தனா. இந்த விஜய் தம்பி இல்ல விஜய் தம்பி. அந்தாளு எதிர்ல வந்திச்சி. அந்தாளும் உன்ன மாதிரி வில்லங்கமான ஆளாச்சா. எதுக்கு வம்புன்னு பணிவா வளைஞ்சி ஒரு கும்பிடு போட்டனப்பா. எதுக்குன்னே தெரியலப்பா. எண்டா நாயே அவனவன் மெயிலுல ப்ளாகுல வெறுப்பேத்துரது போறாதுன்னு என்னை பார்த்ததும் வில்லா வளைஞ்சி கும்பிடு போடுற மாதிரி கடுப்பேத்துரியான்னு பின்னி பெடலெடுதிடிச்சி.

பார்த்திபன்:ஏண்டா நாயே! ராத்திரியெல்லாம் ஓட்டு மேல ஏறி உக்கந்திருக்கியாமே? உன் சம்சாரம் சொல்லிச்சி

வடிவேலு:அட போப்பா. பக்கத்து வீட்டுக்காரன் சொல்லிட்டிருக்கான் பொண்டாட்டிகிட்ட. கேப்டன் ஓட்ட பிரிச்சிருவாருன்னு. ஏற்கனவே அந்தாளுக்கும் நமக்கும் சரி வரல. அதான் உசாரா இருக்கறது. இப்போ புரியுதா?

வடிவேலு: சிம்ரன்! டெலக்ஸ் பாண்டியன்னா ஊர்ல எல்லா பயத்துக்கும் அவ்ளோ பயம் தெரியுமா?
சரளா: அட தூ. நேத்து பொறந்ததெல்லாம் எஸ்.எம்.எஸ்., இமெயில்னு திரியுதுக. பேர பாரு டெலக்ஸ் பாண்டியன். இதுக்கு பந்தா வேற.

வ‌டிவேலு:ஏந்த‌ம்பி. நீஜிலாந்து மேச்சில‌ 100 ஓட்ட‌த்துக்கு மேல‌ ஜெயிச்சிட்டம் பார்த்தியா?
பார்த்திப‌ன்:நீ எப்போடா நியூசிலாண்ட் போன‌?
வ‌டிவேலு:நான் அங்க‌ போன‌ன்னு சொன்ன‌னா? டி.வில‌ பார்த்த‌ன‌ப்பா.
பார்த்திப‌ன்:எங்க‌ காட்டுடா பார்க‌லாம்.
வ‌டிவேலு:(ஆஹா. ஆர‌ம்பிச்சிட்டான். ந‌ம்ம‌ள‌ காவு வாங்காம போமாட்டா‌ன் போல‌யே) நின‌ச்ச‌ப்ப காட்டுன்னா எப்ப‌டிப்பா. மேட்ச் ந‌ட‌க்க‌ற‌ப்போ தான‌ காட்டமுடியும். ‌
பார்த்திப‌ன்:மேட்ச் 'ந‌ட‌ந்துச்சின்னா' அப்புற‌ம் ஏண்டா ஓட்ட‌ம்னு சொல்ற‌ வெண்ண‌.
வ‌டிவேலு:அட‌ மேட்ச் ஓட்ற‌தில்ல‌ப்பா. ஆடுற‌வ‌ங்க‌ தான் ஓடுற‌து.
பார்த்திப‌ன்:ஆடுற‌வ‌ங்க‌ ஓடிட்டா அப்புற‌ம் எப்பிடிடா ஜெயிச்சாங்க‌?
வடிவேலு:விடுய்யா. விடுய்யா. இனிமே நான் மேட்சே பார்க்க‌ல‌ போருமா?

பார்த்திப‌ன்:ஏண்டா? வ‌ட‌ இந்தியால‌ போய் தேர்த‌ல்ல‌ நிக்க‌ போறியாமே? என்னா மேட்டரு?
வ‌டிவேலு:அதுவா? அது ஓபாமா டெக்கினிக்கு.
பார்த்திப‌ன்:அதென்னாடா டெக்கினிக்கு.
வ‌டிவேலு:அது வ‌ந்து த‌ம்பி உள்ளூர்ல‌ எல்லாரும் ந‌ம்ம‌ள‌ மாதிரியே இருக்காங்க‌ளா. ம‌க்க‌ளுக்கு அடையாள‌ம் தெரிய‌ற‌தில்ல‌. பூரா ப‌ய‌லும் வெள்ள‌யா இருக்கைல‌ ஓபாமா ந‌ம்ம‌ க‌ல‌ர்ல‌ இருந்த‌தால‌ தான‌ ப‌ளிச்சுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு குத்தொ குத்துன்னு குத்தினாங்க‌. அதாம்பா நாம‌ளும் அப்டியேஏஏஎ பாலோ ப‌ண்றோம்.

வ‌டிவேலு:ஏந்த‌ம்பி. இந்த‌ அரி ப‌ட்ட‌ர் எங்க‌ இருக்காப்ப‌ல‌.
பார்த்திப‌ன்:பெருமாள் கோவில்ல‌ போய் கேளுடா எரும‌.
வ‌டிவேலு:அட நீ வேற‌ப்பா. நான் சொல்ற‌ அரி ப‌ட்டரு. சின்ன‌ பைய‌ன். க‌ண்ணாடி போட்டுகிட்டு ஒட்ற‌குச்சில‌ உக்காந்து ஏரோப்ளேன் மாதிரி சும்மா ரொய்ய்ங்னு போவுமே. அந்த‌ ப‌ட்ட‌ரு.
பார்த்திப‌ன்:அது ஹாரி பாட்ட‌ர்டா முண்ட‌ம். அந்தாளு எதுக்கு இப்போ?
வ‌டிவேலு:அதில்ல‌ப்பா. அமெரிக்கால‌ ரெண்டே க‌ச்சி தானாம்ல‌. அதான் இப்பிடி ஒரு பேம‌சான‌ ஆள‌ புடிச்சி த‌லைவ‌ராக்கி அ.மு.க‌.னு ஒரு க‌ட்சிய‌ ஆர‌ம்பிச்சா என்னான்ன்னு ஒரு ஐடியா.

பார்த்திப‌ன்:டேய். நிறுத்து. ஏன்டா அப்பாவிய‌ போட்டு இந்த‌ அடி அடிக்கிற?
வ‌டிவேலு: இவ‌னா? இவ‌னா அப்பாவி? இவ‌ன‌ அப்டியேஏஏஏ சேத்து வெச்சி அறுக்க‌ணும். என்னா பேச்சு பேசிட்டான். ராஸ்க‌ல்.
பார்த்திப‌ன்:அப்பிடி என்னாய்யா சொல்லிட்டான்.
வ‌டிவேலு: என்னா சொன்னானா? சூப்ப‌ர் ஸ்டாரு யாருன்னா ர‌ஜினி இல்ல‌ கேப்ட‌ன்னு சொல்றான். ஏண்டான்னா ர‌ஜினி யார் ப‌க்க‌ம்னு யாருமே கண்டுக்கலையாம் . கேப்ட‌ன‌ தான் அம்மாவும் அய்யாவும் கூட்ட‌ணிக்கு வா கூட்டணிக்கு வான்னு கூப்டுறாங்க‌ளாம். என்னா கொழுப்பு!

Wednesday, March 18, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 14

இந்திராகாந்தி வழங்கிய ஆயுதங்கள்தான் விடுதலைப் புலிகளிடம் உள்ளது: பழ.நெடுமாறன்

அவ்வளவு பழச வெச்சா இந்த போடு போடுறாங்க. என்னன்னாலும் அந்த காலத்து தரமே வேற. நாள்பட்டு உழைக்கும் போல. அது ஆயுதம்னாலும்.

இந்தியாவின் உதவியால் புலிகளை வென்றோம்: இலங்கை அமைச்சர்

இப்படியா போட்டு குடுப்பானுங்க தேர்தல் சமயத்துல. இங்க இல்லவே இல்லைங்கராங்க ராசா.

போர் நிறுத்தத்தை நிராகரித்தது இலங்கை அரசு

போராத காலம் வந்தா புடனில அறைஞ்சாலும் உறைக்காது.

இலங்கை ராணுவ தாக்குதல்: நிறைமாத கர்ப்பிணியும், சிசுவும் துடிதுடித்து இறந்துள்ளனர். : செய்தி

ஐ நா ஆழ்ந்த கவலையுடன் கவனிச்சிக்கிட்டு தான் இருக்கு. என்னைக்காவது என்னன்னு கேக்காம போய்டுமா?

தேர்தலில் புதியவர்களுக்கே அதிகம் வாய்ப்பு:கலைஞர்

நாடாளுமன்ற தேர்தல் தானே. குடுக்கலாம்.

பகுத்தறிவாளர்கள் முக்கண்ணை நம்புவது இல்லை. பாவம் பகுத்தறிவு: ஜெ.வுக்கு கலைஞர் பதில்

அப்போ அன்னைக்கு அரசியல் பண்புக்கு விட்ட அறிக்கைல எம்.ஜி.ஆர் உடல் நலமடைய பிரார்த்தித்தேன்னு சொன்னது பொய்யா?

முதல்வரின் அறிக்கைகளிலே அந்த அம்மை யாரைஇப்படிப்பட்ட வார்த்தைகளால் எப்போதாவது வர்ணித்திருக்கிறாரா என்பதை நீங்களே கூறுங்கள்: ஆற்காடு வீராசாமி

முதல்வரா இல்லாதப்பொ சொன்னாங்களோ என்னாமோ. ஆமா. எடுபிடின்னு சொன்னாங்கன்னு எகிறிட்டு அவர சொன்னதுக்கு இவர் ஏன் பதில் சொல்றாரு?

உண்மையை மக்களுக்கு தெரிவிப்பது எனதுகடமை:ஜெ

நம்பிட்டோம்ல.

யாருடைய ஜாதகம் பிரகாசமாக இருக்கிறதோ அவர்களையே வேட்பாளராக அறிவிக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது: செய்தி

ஜோஸ்யக்காரங்களுக்கு அடிச்சது யோகம். ஆர்வக்கோளாரில கட்சித்தலைமை பதவி யோகம் வரா மாதிரி எழுதிட போறாங்கண்ணோவ். ஆப்புதான்.

Tuesday, March 17, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 13

இலங்கை தமிழர்களுக்கு ஈரோட்டில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடுவீடாக, கடை, கடையாக சென்று நிவாரணப்பொருட்களை திரட்டினார்கள்.

திரட்டினாங்களா மிரட்டினாங்களா? தேறுச்சா இல்ல தண்டல் தானா? எலெக்சன் கணக்குல எழுதிடலாம்.

இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற வழக்கா? இங்கு ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும்! எச்சரிக்கிறார் விமல் வீரவன்ச
அப்டி போடு. இப்போ பார்க்கலாம். அறிக்கை திருப்தி அளிக்கிறதுன்னு சொல்றாங்களான்னு


மக்களை மீட்கும் கோரிக்கைகளை இலங்கை அரசு மெல்லத் தட்டிக்கழிப்பு "ஹிந்து" பத்திரிகை தகவல்
யப்பா! பார்டி ஆளுங்க அடிக்கிற பல்டிய விட பத்திரிகைங்க அடிக்கிற பல்டி அந்தர் பல்டிடா சாமி!


’’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள்" கலைஞர்

அடுப்பு வேணாம்.அவன் போடுற பாஸ்பரஸ் குண்டு எரியரதுல சமைக்கலாம். ஆமா? இதையும் சேர்த்தா அம்மா குடுத்தத விட ஒரு 10ரூ ஆவது கூட வரணும் கணக்கு. இல்லன்னா அந்தம்மா சொல்லி காண்பிக்கும் அல்பமா.


என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டிருக்குமே யானால் இந்த நேரத்தில் இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினப் படு கொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.ஜெ
எது புலிக‌ள் ஆயுத‌ங்க‌ளை கீழே போட‌ வேண்டும். பேச்சு மூல‌மே தீர்வுன்னா. என‌க்கு தெரிஞ்சி உண்ணாவிர‌த‌ ப‌ல்டிக்க‌ப்புறம் கோரிக்கை வைக்க‌வே இல்லையே?


“மூக்கறுந்து போன மூளி, அலங்காரி, நாக்கறுந்து தொங்குகின்ற நரி, நாலாந்தரப் பெண், மகுடம் பறி கொடுத்த மாயராணி, செப்படி வித்தை மாமி போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் அறிக்கைகளை என்ன என்று சொல்வது. ஜெ
அறிக்கை தான். வேற‌ என்னா. த‌லைவா நாளைக்கு உங்க‌ லிஸ்ட் சும்மா அதிர‌ணும்.


ராதா ர‌வி திமுக‌ வில் சேருகிறார்‍:செய்தி
க‌ழுத‌ கெட்டா குட்டிச் சுவ‌ர். பார்த்து. தாய் வீட்டுக்கு வ‌ந்தார்போல்னு சொல்லிட‌ப்ப‌டாது. இன்னும் அம்மா பாச‌மான்னு நினைச்சிடுவாங்க‌.


பிரபாகரன் போர் முனையில்தான் இருக்கிறார் என்றும், அவருடைய தலைமையில் விடுதலைப்புலிகள் போரில் ஈடுபட்டு வருவதாகவும், இலங்கை ராணுவம் தெரிவித்து உள்ளது.
எப்போ திரும்பி வ‌ந்தாரு? க‌ழிச‌டைங்க‌. குட்டி விமானத்துல ஓடிட்டாரு. நீர்மூழ்கி கப்பல்ல தப்பியாச்சி. பாதாள அறைக்குள்ள படுத்திருக்காருன்னு என்னல்லாம் சொன்னானுவ.


வைகோ கூட்டத்தை புறக்கணித்த ராமதாஸ்,திருமா
வேட்டு ப‌த்தியே பேசிண்டிருந்தா ஓட்டு போயிடுமே.

Monday, March 16, 2009

கத கேளு கத கேளு - 4

ஒரு ரெண்டு பூனைங்க ஒரு ஊர்ல நல்ல பசில இருந்திச்சாம். ரெண்டும் தல. ஒரு பூன ஆண் பூன. வயசாளி பூன. மத்தது பெண் பூன. ரெண்டும் ஒன்ன ஒன்னு கறுவிண்டு திரிஞ்சதாம். இப்படியே திரியரப்போ கிழப்பூனை ஒரு வீட்டில அப்பம் ஒண்ணு இருக்கறத பார்த்திச்சாம். இது என்னா பண்ணுதுனு மத்த பூன பார்க்கும். அது என்னா பண்ணுதுன்னு இந்த பூன பார்க்கறது, எப்பவும். அதனால இந்த பூன கண்ணு போன பக்கம் பெண் பூன பார்த்துடிச்சி. பம்மி பம்மி போயிண்டு ஒரு தாவல்ல அப்பத்த லவட்டிடிச்சி. வயசாளிப் பூன அய்யகோ! நான் தான முதல்ல பார்த்தேன். எனக்குதான் சொந்தம்னிச்சாம். மத்த பூன பார்கறதெல்லாம் சொந்தமாக்கிக்கறது தெரிஞ்ச விடயம் தானே. பாய்ஞ்செடுத்தது நானு. எனக்குதான் சொந்தம்னு சண்ட. பூன சண்டன்னா தான் ஊரறிஞ்சு போகுமே. ரெண்டு பூனையோட ஆளுங்களும் கூடிட்டாங்க. கேக்கணுமா. சண்ட நாறிப்போச்சு. அங்கால ஒரு குரங்கு வந்திச்சி. ஒரு அப்பத்தால பூன கலவரம் உண்டாகப்படாது. ஊரே ரணகளமாயிடும். அதனால நான் கொண்டு போரேன்னு போய்டுச்சி. கிழட்டுப் பூனைக்கு குஷி. மவளே அசந்தாப்பில இருக்கறப்பொ அடிச்சிண்டு போக பார்த்தியே. இப்பொ உனக்கில்லாம போச்சானு. பெண் பூனைக்கும் குஷி. எனக்கு அவ்ளோ பசி இல்ல. ஆனாலும் நான் தான லவட்டினது. அது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி. குரங்கு பண்ணது சரி இல்லன்னு பேசுவாங்கல்ல அது போரும் போய்யான்னு போச்சாம்.

(அட ஒரு கத சொன்னா கேட்டுக்கணும். அத விட்டு வயசாளி பூன யாரு. பெண் பூன யாரு. குரங்கு தேர்தல் ஆணையமா. ஆப்பம் ஈழப் பிரச்சனையான்னு எல்லாம் கேள்வி கேட்டா நான் என்ன பண்ண. நீங்களே சொல்லுங்க மக்கா.)

நறுக்குன்னு நாலு வார்த்த - 12

(மனைவிகள் பிள்ளைகள் குறித்த ஜெ. கமென்டுக்கு தலீவர் பதில்)
ஒரு முன்னாள் முதல்வர் பேசும் பேச்சா இது?
தலைவரா இப்படி பேசுறாங்க. என்னாச்சி தெரியலயே?

பதிலுக்கு 'உடன் பிறவா சகோதரிகள் எத்தனை' எனக் கேட்கலாமா?
அப்டி போடுங்க த‌லைவரே! எப்பிடியும் கேக்காம‌ விட‌ப்போற‌தில்ல‌. இதுக்கெதுக்கு த‌ய‌க்க‌ம்.

திருமாவ‌ள‌வ‌ன் எங்க‌ள் அணியில் தான் இருக்கிறார்‍ - க‌லைஞ‌ர்
இல்ல‌ன்னா தான் த‌டைச் ச‌ட்ட‌த்தில‌ உள்ள‌ இருப்பார்ல‌. இத‌ சொல்ல‌ணுமா?

இல‌ங்கைப் பிர‌ச்சினைக்கு அர‌சிய‌ல் தீர்வு ஒன்றே வ‌ழி - ப்ர‌ணாப்
அதுக்கேன்யா 1500 கோடிக்கு ஆயுத‌ம் குடுக்க‌ணும் கொய்யாலே!

3வ‌து அணி காணாம‌ல் போய்விடும் - கார்த்திக்
இவ‌ரு இவ்வ‌ளோ நாள் எங்க‌ காணாம‌ போனாரு

40 தொகுதிக‌ளிலும் வெல்லுவ‌தே குறிக்கோள் - ஜெ
ஐ. ஐ. சுவாமி சும்மா சொல்லுவாரு மேடம் பிரதமராக்கறேன்னு. அதெல்லாம் நம்பி அறிக்கை விட்டா ?

ப‌ண்பில்லாம‌ல் என்னை மூச்சுக்கு முன்னூறு முறை க‌ருணாநிதி என‌ அழைப்ப‌வ‌ர் ஜெ - த‌லைவ‌ர்
அந்த‌ம்மா முத‌ல்ல‌ என்னா பேரோ அதான் சொல்லும். இல‌ங்கைன்னாலும் ச‌ரி. நீங்க‌ன்னாலும் ச‌ரி. ஆமாம் பேரு வைக்க‌ற‌தே குறிப்பிட‌தானே? அதில‌ என்னா ப‌ண்பு.

நான் அம்மையார் என்று தான் அழைப்பேன் - த‌லைவ‌ர்.
அய்ய‌ தோடா! அதுல‌ ம‌ணிவ‌ண்ணன் கூப்டுற‌ அம்ம‌ணில‌ இருக்க‌ற‌த‌ விட‌ தூக்க‌லா ந‌க்க‌ல் இருக்கிற‌து தெரியாதாக்கும்.

இல‌ங்கை ராணுவ‌த்துக்கு மேல‌திக‌ ஆள் சேர்ப்பு - ஃஃபொன்செகா
அன்னைக்கு க‌ண‌க்கில‌ எல்லாரும் போயாச்சி. 400 பேருதான்னு சொல்லி இப்பொ இது என்னா? விளையாடிண்டிருக்க‌றத‌ எல்லாம் புடிச்சி யூனிஃபார்ம் குடுத்து அனுப்ப‌ற‌து தானா? பாவிங்க‌ளா.

யாலா காட்டில் புலிக‌ளைத் தேடிப் போன‌ ப‌டையின‌ரை குள‌வி துர‌த்தி துர‌த்தி கொட்டிய‌து - செய்தி
கொட்டி (புலிக‌ள்) புடிக்க‌ போனா கொட்டிடுச்சி பாவ‌ம். பன்னாடைங்க புலிய தேடி போனா அதமட்டும் பண்ண மாட்டானுங்களே. தேன் கூட்ட பார்த்ததும் அதுல பாய்வானுங்கோ. கோத்த‌பாய் குள‌வியும் தீவிர‌வாதின்னு ஹார்ட் அட்டாக் வராமாதிரி அல‌ற‌ப் போறான். ம‌த்த‌ ப‌ர‌தேசிங்க‌ அர‌சிய‌ல் தீர்வு தான் வ‌ழி. குள‌வி கூட பேச்சு வார்த்த‌ ந‌ட‌த்த‌ சொல்லும்.

ந‌வ‌நீத‌ம் பிள்ளை புலிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர் என‌ நாங்க‌ள் க‌ருத‌வில்லை - பொக‌ல்லாக‌ம‌
த‌லைவ‌ர் டைப்ல‌ அடிக்க‌றான் பாரு. ஏண்டா சாவ‌டிக்க‌ற‌ன்னு கேக்குற‌ ஆளெல்லாம் புலி எள‌வெடுத்த‌வ‌னுங்க‌ளுக்கு.

எனது புத்திமதிகளைக் கேட்டிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு ஏதாவது மிஞ்சி இருக்கும் -பிரபாகரனுக்கு ஆனந்த சங்கரி கடிதம்
பிச்ச‌க்கார‌ புத்தி போவுதா பாரு. யோவ். ஏதாவ‌து போரும்னு இருக்க‌ற‌ ஆளெல்லாம் ந‌ல்லா தான் இருக்கிங்க‌. மான‌மா சாவ‌ணும்னு இருக்க‌ற‌து தான் சாவுது. இந்தாளுக்கு கிளிநொச்சில‌ வீடு விக்க‌ணும். அதான் சாவுது.

கத கேளு கத கேளு - 3

ஒரு காட்டில ஒரு கலைமான் இருந்திச்சாம். அதுக்கு தான் தான் ரொம்ப அழகுன்னு கர்வம். ஒரு நாள் ஒரு ஆற்றில தண்ணி குடிச்சிண்டு தன்னோட பிம்பத்த பார்த்திச்சாம். ஆஹா. நான் என்ன அழகு. அழகான உடம்பு. என்னை மாதிரி அழகான கொம்பு வேற எந்த மிருகத்துக்கும் இல்லை. மினு மினுன்னு தோல். இவ்வளவு அழகா என்னை ப‌டைச்சிட்டு கால் மட்டும் குச்சி குச்சியா அசிங்கமா ஏன் படைச்சான். ரசனையே இல்லாமன்னு வருத்தமா பார்த்துச்சாம். அப்போ ஒரு வேடன் வர இது பாய்ஞ்சி ஓடிச்சாம். காடு கரடுன்னு ஓட வேடன் துரத்த இது பறந்தடிச்சிண்டு ஓட ஒரு கிளைல இதோட கொம்பு சிக்கிடிச்சி. வேடன் நெருங்கிக்கிட்டிருக்கான். இது தவிச்சி ஒரு மாதிரியா விடுவிச்சிண்டு ஓட ஆரம்பிக்க வேடன் நெருங்கிட்டான். ஒரே பாய்ச்சலா ஓடி தப்பிச்சி, ஆத்தாடி, கொம்பு அழகுதான். ஆனா குச்சியா இருந்தாலும் காலால தான உசிர் பிழைச்சதுன்னு நினைச்சதாம்.

(இத படிச்சிட்டு அம்மாதான் மான், வேடன் தேர்தல், கொம்பு கூட்டணி, கால் ஈழ (மன்னிக்கணும் அம்மாக்கு தான் ஈழமே இல்லையே) இலங்கை பிரச்னைன்னோ நினைச்சா நான் பொறுப்பில்ல சாமிகளா)

Sunday, March 15, 2009

தலை நிமிர வைக்கும் இந்தியன்

கொஞ்ச நாளா இலங்கைக்கு ஆயுதம் குடுத்தாங்க. பயிற்சி குடுத்தாங்கன்னெல்லாம் படிச்சி ரொம்ப சங்கடமா இருந்திச்சி. ஆக்க பூர்வமா எதுவும் பண்ணாம இப்படி அழிவுக்கு நாம காரணமா இருக்கோமேன்னு . இல்லைங்க. ஆக்க பூர்வமா பண்ணவும் நம்மாளு இருக்காங்க. ஆனா இதையும் நம்மாளுங்க அரசியல் லாபத்துக்கு விபரீதமா பயன் படுத்த மாட்டங்கன்னு நம்பிக்கை இல்லை. பார்த்து வைங்கோ.

Saturday, March 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 11

நலிவும் நானும்: கலைஞர் நாட்குறிப்பு

இது கடோசிக்கு அடுத்த சாதனபா. நோக்காட்ல போய் யார்னா இருமல் மருந்தில இருந்து இன்னான்னா இஞ்ஜிக்சன் போட்டாங்கோன்னு எய்தி வெச்சிகினு பேபர்ல போட்டுக்குறாங்களா. பார்டி படா உசாரு. டாக்டருங்க பேஜாரு.

இருமல் மருந்து கொடுத்தார்கள். அதையும் சாப்பிட்டேன்: அவரேதான்

ஆஸ்பத்திரில வேற இன்னாப்பா குடுப்பாங்க.

ஸ்டாலினிடம் நிதி நிலை அறிக்கையைக் கொடுத்து இதுவே என் கடைசி ஆவணவமாக இருக்கலாம் எனக் கூறினேன்: வேற யாரு. தலீவர்தான்

நாட்டு நிதி அறிக்கை தானே. பிரச்சன இல்ல. வீட்டுதுன்னா தான் வில்லங்கம்.

அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என்று கதறிவிட்டார்: தலீவர்

அது. எங்களுக்கே கடோசின்னா அப்பாலயும் இருக்கும்னு தெர்தே. அவருக்கு தெரியாம பூடுமா?

நான் உண்ணாவிரதம் இருந்ததை நகைச் சுவை என்று கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது: ஜெ

அனியாயமா தினம் குப்ப குப்பயா குஞ்சும் குளுவானுமோ சாவர்து இதுங்களுக்கு காமெடி, கூத்துன்னு கீதே. எங்க போய் அடிச்சிக்கிறது.

காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர்.-அந்த அரசியல் நாகரிகம் இப்போது இல்லை:கலைஞர்

தோடா. இவரு சொல்றாரு இத.(அண்ணாவ மறந்தே மறந்துட்டாங்கப்பா)

என் படத்தை எரிக்கிற அளவுக்கு என்ன வஞ்சனை செய்தேன்: கலைஞர் டைரி

படத்துக்கே இப்படி வேதனயா கீதே! பாஸ்பரஸ் குண்டுல எரிய குடுத்தவங்க கத என்னா?

பல மனைவிமார்கள்-எண்ணிலடங்கா குழந்தைகள்: கலைஞர் பற்றி ஜெ.கமெண்ட்

நாளைக்கு பதில் நாறபோவுது.

புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டு இரண்டு ராணுவம் அமைக்கலாம்: கோத்தபாய‌

ஆமாம். அவங்களுது பாதி. இவனுங்கோ போய் போய் குட்துட்டு துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடியாந்தது மீதி

இழப்புகள் குறித்து ஃபொன்சேகாவிடம் மகிந்தா கேள்வி

ஜனாதிபதிக்கே காது குத்திட்டானா அந்தாளு.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் தேதிமுக?

கல்யாண மண்டபத்துல மேம்பாலம் கட்டினதெல்லாம் மறந்துட்டாரா கேப்டன். கவனிச்சிட்டாங்களா?

Friday, March 13, 2009

கத கேளு கத கேளு-2

முல்லா நசிருதீன்னு ஒரு ஆளுங்க. வில்லங்கமான ஆளு. ஊருக்குள்ள ஒரு திடல். அங்கன தான் சொற்பொழிவு, கூத்து, நாடகம் எல்லம் நடக்கும். இந்தாளு ஒரு நாள் மதியம் உச்சி வெயில்ல ஒரு துண்ட விரிச்சி உக்காந்திருந்தாங்க. தலைல குல்லா. அந்த பக்கமா கடந்து போன ஒரு ஆளு பார்த்தாரு. என்ன இது வெயில்ல இந்தாளு உக்காந்திருக்கேன்னு வந்து கேட்டாங்க. என்ன இங்க உக்காந்திருக்கிங்கன்னு. இந்தாளு, பின்ன என்ன தம்பி மெதுவா வந்தா எங்கயோ பின்னாடி நிக்க வேண்டி வருது. ஒண்ணும் புரியுதில்ல. அதான், முதல்ல வந்து இடம் பிடிச்சா உக்காந்து பார்க்கலாம்ல அதான்னாங்க. அந்தாளும், ஆமாம். நானும் இவ்ளோ கிட்டத்தில பார்த்ததில்ல. நல்ல காலம் சொன்னீங்கன்னு துண்ட விரிச்சி உக்காந்துட்டாங்க. இவங்கள பார்த்து இன்னோரு ஆள், அப்படியே இன்னோரு ஆள்னு ஊரே திரண்டுடிச்சி. சாயந்திரம் வர எல்லாரும் நெளிஞ்சிகிட்டு எப்பொ எப்போன்னு உக்காந்திருந்தாங்க. ஊரே காலி. எல்லாரும் திடல்லனு ராஜாக்கு தகவல் போச்சி. அந்தாளு அங்க என்னான்ன யாருக்கும் ஒண்ணும் தெரியல. சரின்னு கிளம்பி போய் கடைசியா இருந்த ஆளுட்ட கேட்டாங்க. என்ன இங்க இவ்ளோ சனம்னு. தெரியல இவன் நின்னான். நானும் நிக்கறேன்னாங்க. அந்தாள கேட்டா அந்தாளு பக்கத்து ஆள காண்பிக்குது. இப்படியே யாருக்கும் தெரியாம கடைசில முல்லாவை காண்பிச்சாங்க. ராஜா கேட்டாரு. எதுக்கு உக்காந்திருக்கன்னா, இல்ல எப்பவும் பின்னாடி நின்னு ஒண்ணும் பார்க்க முடியல. சரியா கேக்க முடியல அதான் முதல்ல வந்து உக்காந்தேன்னு. சரி இன்னைக்கு இங்க ஒண்ணும் நிகழ்ச்சி இல்லயே அப்புறம் ஏன் உக்காந்தன்னாங்க. இன்னைக்கு இல்லன்னா என்ன என்னைக்காவது நடக்கும்ல அதான்னு சொல்லிட்டு. எல்லாரும் பார்த்துக்குங்க. ராஜாவே சாட்சி. நாந்தான் முதல்ல வந்து இங்க இடம் புடிச்சேன். எப்போ இங்க எது நடந்தாலும் இது என் இடம்னு சொல்லிட்டு, முதுகெல்லாம் வலி போய் படுக்கலாம்னு போய்ட்டே இருந்தாங்க. எல்லாருக்கும் அசடு வழிஞ்சதாம்.

(கடைசி சாதனைக்கும் அப்புறம் எது நடந்தாலும் நாந்தானு சொல்லிண்டிருக்கரதுக்கும் சம்பந்தப்படுத்திப் பார்த்திங்கன்னா நான் பொருப்பில்ல. சரிங்களா?)

Thursday, March 12, 2009

இப்படியும் நடக்கலாம்

1. எலக்சன்ல தோத்து போய் ப்ரணாப் சுயசரிதை எழுதி, கலைஞர் தான் சண்டைய நிறுத்த வேணாம்னு சொல்ல சொன்னாரு. நான் ராஜபக்சேட்ட சொன்னென்னு சொல்லலாம்.

2. தேர்தல்ல எதிர்காலம் கருதி காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணின்னு சொல்லலாம்.

3. அம்மா உண்ணாவிரதம் இருந்ததால திருமா தானும் ஆதரிக்கிறேன்னு சொல்லலாம்.

4. ராஜபக்சே ராடார்ல ஆதித்யா சேனல் வரலைன்னு சோனியா கிட்ட சொல்லலாம்.

5. வைகோ கலைஞருக்கு ஆதரவு. அதே சமயம் புலிகளுக்கும் ஆதரவுன்னு சொல்லலாம்.

6. சுவாமி என்ன யாரும் முட்டயால அடிக்கல. நான் தான் முட்டைமேல விழுந்தேன். போலீஸ் தான் அடிச்சிட்டான்னு சொல்லலாம்.

7. எல்லாரும் உண்ணாவிரதம் இருந்தப்போ கலைஞர் வேணும்னே இருக்கலை. அதான் காங்கிரஸ்கு டெபாசிட் போச்சுன்னு தங்கபாலு சொல்லலாம்.

8. கலைஞரும் வந்தா நான் ராஜபட்சே அழைப்பை ஏற்று வன்னி செல்லத் தயார்னு ஜெ சொல்லலாம்.

9.சீமான், கொளத்தூர் மணியெல்லாம் கைது பண்ணது பேச்சுச் சுதந்திரம் இல்லைன்னு ஹிந்துல தலையங்கம் வரலாம்.

10.பொன்ஸேகாவுக்கு புலிகள் பயிற்சி தரும் பட்சத்தில் தமிழருக்கு சம உரிமை தரப்படும் என பக்ஸே சொல்லலாம்

11. முதுகுத் தண்டே இல்லாதவருக்கு அங்கே என்ன சிகிச்சை தர முடியும் என மக்கள் கேட்கலாம்



Wednesday, March 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 10

இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி ஆடிப்போயிருக்கிறார்:ஜெ

அவ்ளோதான் எஃபெக்டு. அவன் அடிக்கறத நிறுத்தப்போறதில்லை. நீங்க கவல பட போறதும் இல்லை. இவருக்கு குடைச்சல் கொடுத்தால் போதும்.

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கருணாநிதி தட்டிக்கேட்டிருக்க வேண்டும்:ஜெ

எதிர்காலம் வேண்டுமென்றால் எங்கள் அணிக்கு வாருங்கள்னு சொன்னப்போ இத கேட்க தோணலயாங்க?

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கட்சிப் பாகுபாடின்றி அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்த முதல்வர் கருணாநிதி நான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தவுடன் ஏன் நிலை குலைந்துவிட்டார் என்பது தெரியவில்லை:ஜெ

அனியாயமா மிஸ் பண்ணிட்டாரு. நான் சொல்லிதான் ப்ரணாப் இலங்கைக்கு போனார்னு சொன்னா மாதிரி, நான் கேட்டதாலதான் அம்மையார் உண்ணாவிரதம். டாங்ஸ்னு சொல்லி இருந்தா உங்களுக்கு B.P. எகிறியிருக்கும்.

இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நிவாரணப் பொருட்கள் திரட்டப்படும்: காங்கிரஸ் தங்கபாலு

ரொம்பதாம்பா நக்கலு இந்தாளுக்கு. சண்டைய நிறுத்த சொல்லுன்னா அவன் இறையாண்மை போய்டும்னு சொல்லிட்டு, இதெல்லாம் மட்டும் குடுத்தா இறையாண்மை போவாதா. மவனே. எங்க? நேர கொண்டு போய் குடுக்க தில் இருக்கா? பிஞ்சிடும்.

பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்: கருணாநிதி அறிக்கை

அந்தம்மா அதாவது பண்ணாங்களா இல்லையா? நாம ஃபிலிம் காட்னதேல்லாம் என்னான்னு கேட்ருவாங்க. ஜாக்கிறதை.

தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்:கலைஞர்

தொப்புள் கொடிக்கு துரோகம் விளைவிப்பது எப்படின்னு உங்க கிட்ட கத்துக்கறதா?

என் உடல் வலியையும் மீறி முத்துக்குமாரின் மரணம் உள்ளத்தை வலிக்கச் செய்தது: கலைஞர்.

நம்பிட்டோம். அதுக்கு ஒண்ணும் மருந்து இல்லையா அங்க?

இந்த நாட்குறிப்பை தொடர்ந்தும் நாளை எழுதுவேன்: கலைஞர்

நாங்களும் தொடர்ந்து படிப்போம். என்னைக்காவது ஈழத்தில ஜனங்க எப்படி இருக்காங்க, என்ன நடக்குதுன்னு யாரயாவது கேட்டீங்களா? சொக்கத் தங்கத்து கிட்ட இது பத்தி பேசினிங்களான்னு.

இலங்கைத் தமிழர்களுக்காக திமுக என்னென்ன செய்தது என்பதை எல்லாம் நினைவில் கொண்டு வந்து பட்டியலிட்டு கட்டுரை எழுதினேன்: கலைஞர்.

அடுத்த பட்டியல்ல இதும் சேர்ந்துடுமாங்க?

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

வாழ்க ஜனநாயகம்! பேசாம காங்கிரஸ் திமுக கூட்டணி தான் ஜெயிச்சதுன்னு சொல்லிட்டா எவ்ளோ கோடி மிச்சம். அப்படியே பக்சேக்கு தானம் பண்ணா தமிழரே இருக்க மாட்டாங்க. பிரச்சனையும் இருக்காது. இப்படி எல்லாம் சொல்லவும் தேவை இல்ல. அது சரி, வலி, ஆசுபத்திரில இருக்கா மாதிரி படமெல்லாம் இருக்கலாமாங்க?

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது: செய்தி

தலைவருங்களா. பார்த்துக்குங்க. இதுக்கு பேரு தான் உதவி. கலக்ஷன் கட்றதும், கைகாசுல வாங்கி ஃபிலிம் காட்டி பங்கு போட்றதுமில்ல. ஏன்? இது நாம பண்ண முடியாதா? போங்கய்யா.

Tuesday, March 10, 2009

மானுடம் பழகுவோமா?

முன்பெப்போதும் இல்லாத அளவு ஈழ மக்களின் வேதனைகளும் வலிகளும் பாமர மக்களை வெகுவாகவே பாதித்திருக்கிறது. ஏன், எதற்கு என்பது குறித்த விழிப்புணர்வு வந்து விடாமல் பல கட்சிகளும் தங்கள் ஆதாயங்கள் தேட ஆதரித்து அல்லது எதிர்த்து என்ற ஒரு நிலைப்பாட்டிலும் ஊடகங்கள் தங்களுக்கு தேவையான போது மட்டுமே பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்று கூவி தங்கள் பங்குக்கு இருட்டடிப்பு செய்தும், தொலைக்காட்சியில் தமிழன் தொலைக்காட்சி தவிர எப்போதோரு முறை இலங்கை அரசாங்கம் சொல்லும் அல்லது தரும் பாரபட்சமான செய்திகளை ஒளி பரப்பிடினும் மாணவர்கள், பொதுமக்களிடையே சீமான், மணி, நெடுமாறன் அய்யா போன்றோரின் முயற்சியில் ஓரளவு புரிதல் வந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழுணர்வாளர்கள் இரு வேளை உண்ணாவிரதமிருக்க தமிழக மாணவரமைப்பின் முயற்சி பெருமை கொள்ளத்தக்கதாகும். மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு இந்த அரசியல் வாதிகளின் சுயலாபச் சண்டை தலைகுனிவை ஏற்படுத்துகிறது. பார்க்கப்போனால் நேற்று ஜெயலலிதா வர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் அவரின் அறிவிப்பு மற்றவர்களின் நிலைப் பாட்டையே கொண்டிருப்பினும், இது நாள் வரை அவரின் நிலைப்பாட்டிலிருந்து ஓரளவு விலகி மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டையே ஒத்திருப்பது தெளிவு. ஒரு இனத்தின் தலைவர் என அனைவராலும் எதிர் பார்க்கப்படும் ஒரு பழுத்த அரசியல் தலைவர், பொறுப்பான முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரிடம் ஒரு சாதாரண மனிதன் ஏக்கத்துடனெதிர் பார்ப்பதெல்லாம், வேறுபாடின்றி (ஒப்புக்காகவேனும் காங்கிரசும் கூட) மக்களின் அவலம் உணர்ந்திருக்கும் இந்த வேளையில் மத்திய ஆட்சியாளர்களின் தோழமைக் கட்சித் தலைவரின் செயல் பாடு குறைந்த பட்சம் போர் நிருத்தமென்ற அளவிலாவது முதன்மைப் படுத்தப் பட்டிருக்க வேண்டுமென்பது. ஆனால் கடந்த சில நாட்களாக தரக் குறைவான முறையில் பேசுவதும், எதிர் கட்சியின் தலைவி என்பதற்காகவே எதிர்ப்பதும் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. பதில் கூற முடியாத கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்கள் கூறுவது கூட நகைப்புக்குரிய ஒன்றாயினும், இன்றைய பத்திரிகையில் தன்னுடைய சுகக்கேடு குறித்தும்
அந்த நேரத்தில் கூட ஜெ அவர்கள் தினம் ஏதோ கேள்வி எழுப்பி அதற்கு தான் எப்பாடு பட்டு பதிலளித்தார் என்பதையும் ஈழப் பிரச்சினையை விட நீளமாக விவரித்த அழகு கூசச் செய்கிறது.

வலி மனிதனுக்கு கடவுள் அளித்ததே மற்றவர்களின் வலியையும் உணர்வதற்குத் தானோ என்று நினைக்கிறேன். பேச எது தடையாய் இருப்பினும் அங்கு நடக்கும் விடயங்கள் மக்களின் அவலங்கள் சாதாரண மனிதனுக்கு தெரிந்திருக்கும் நிலையில் ஒரு முதலமைச்சருக்கு தெரியாமலிருக்க காரணமில்லை. ஒரு வேளை இந்த அவலங்களைப் பார்த்தால் எங்கீ சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் போகுமோ என்று தவிர்த்திருக்கலாம். ஒரு கண்ணொளி பார்க்க நேர்ந்தது. தெரு ஓரம் இறந்தவர்களைப் புதைத்து பக்கத்து மைதானத்தில் லாரியில் தவிடு கொட்டப் படுகிறது. அந்த தவிட்டைப் புடைத்து அதில் மிஞ்சிய குருணை தவிட்டோடு சேர்ந்து தான் அதில் களியோ கூழோ. இது தான் சாப்பாடு. குடிக்கத் தண்ணீர் கூட இல்லை.காகிதம் ஆயுதம் என‌ப் பேசும் பெரிய மனிதர்கள் இதைப் பார்க்காமலா இருப்பார்கள்.



பச்சிளம் பிஞ்சு வலி என்றால் என்ன என்று கூடத் தெரியாது. இவருக்கும் வலிதான். ஆனாலும் இதன் வலிக்கு முன்னால் எம்மாத்திரம். ஆ என்றால் மருந்துடன் மருத்துவர். ஆடையின்றி அலறும் அந்த பிஞ்சுக்கு அம்மா என்ன தருவாள்? ஓடி விழுந்தாலுமே ஊரைக்கூட்டி அழும் வயதில் அந்த முகத்தில் எத்தனை வெறுமை. இந்தப் பிஞ்சு வளர்ந்து அதன் மனதில் மானுடம் இருக்குமா. வலி மறந்தவன் மனிதனாய் இருக்க முடியுமா? மனிதனுக்கு அழகா இது.
மனிதநேயம் இல்லை எனில் இறைவன் எங்கே? இறையாண்மை எங்கே. ஒரு மாதமாக இதுகுறித்து பேசக்கூட மனமின்றி பேசுபவர்களை நையாண்டி செய்து சாதிக்கப் போவதென்ன.

ஒரு சுனாமி வந்தது. அது பாடம். காரில் வந்து நடந்தவனும், தூங்க இடமின்றி மணலில் தூங்கியவனும் ஒன்றாய்தான் மரித்துப் போனார்கள். இப்போது கூரையின்றி இப்படி குண்டடி பட்டு நிற்பவர்களில் பணக்காரர் யார்? ஏழை யார். ஜாதி இருக்கிரதா இங்கே? வலி வலி வலி மட்டுமே? உலகத்தில் எல்லாரையும் போல்தானே நானும் பிறந்தேன். எனக்கேன் இந்த அவலம் என இவர்களின் வயிறு எரியாமல் போகுமா? அதற்கு விலை நாம் தான் தரவேண்டும்.

யாராவது இந்த இடுகையும் படிக்கலாம். 13ம் திகதி இவர்களுக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் என படித்திருக்கலாம். ஆனால் அது மட்டுமே எந்த கையாலாகத அரசியல் வாதியின் தாக்கமும் இல்லாமல் நாம் செய்யக் கூடியது. வலி தாங்க மாட்டோம். என்றோ ஒரு நாள் இவர்களைத் தேர்ந்தெடுத்த பாவத்துக்கு நமக்கும் இப்படி நேரலாம். குறைந்த பட்சம் பசி தாங்கவாவவது பழகுவோமா நண்பர்களே? நம் குழந்தைகளிடமிருந்தாவது மானிடம் கற்போம். உண்ணாமல் இருப்போமா அந்த ஒரு நாள்?

Monday, March 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 9

தி மு க கூட்டணியில் சிண்டு முடியப் பார்கிறார் ஜெ : கலைஞர் கண்டனம்.


சோனியா என்ற சொக்கத் தங்கத்தை "பதி விரதையா?" என்று கேட்டது யார் என எனக்கு தெரியும்: கலைஞர

மதுரைய எரிச்சா கண்ணகி, இலங்கைய எரிச்சதால இந்தம்மானு சொல்றியா தலீவா? முடியாம இருக்கறப்போ இதெல்லாம் எதுக்கு உனுக்கு

பதிவிரதையா எனக்கேட்டவர் எம்.ஜி.ஆர் பற்றி ராஜீவுக்கு எழுதிய கடிதத்தில் என்ன எழுதினார் என்பதும் எனக்குத் தெரியும் : கலைஞர்

அடுத்தவங்க கடுதாசிய படிக்கலாமா. அசிங்கமா கீது. பெரியமன்ஸன் பேசுர பேச்சா இது. அதும் கலியாண வூட்ல.

என்னைத் திட்டுவதற்காகத் தான் உண்ணாவிரதம் இருக்கிறார் ஜெ : கலைஞர்

டெய்லி தான் திட்டுது அந்தம்மா. தெரியாம கேக்குறேன், இதென்னா ரோகம் யாரு எது செஞ்சாலும் என்ன கவுக்கதான் என்ன திட்டதான்னு?

சேப்பாக்கத்தில் ஜெ உண்ணாவிரதம்:செய்தி

தலீவர் தொகுதில உண்ணாவிரதம் இருந்துகினு திட்ட வேற செஞ்சிதாமே? அதான் தலீவரு பேஜாராய்ட்டாரு. தில்லுகார பொம்பளபா இது.

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்பட்டு சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டுமென்ற அவர்களது போராட்டத்தை ஆதரிக்கும்.: ஜெ

அட போம்மா. அவனுங்க அரசியலமைப்புல தமிழனுக்கு எந்த உரிமையுமில்லன்னு தானே போராட்டமே. அதுக்குட்பட்டு தனி நாடு கேக்கறாங்கன்னு கதைய மாத்துறியே. பேசாம வீட்ல சாப்டு எலக்சன் கணக்கு போட்டிருக்கலாம்.

வக்கீல்கள் போலீஸ் தகராரில் நான் நீதியின் பக்கம் நிற்பேன்: கலைஞர்

முதலமைச்சரே சொல்டாருபா. வக்கீல் கிட்ட போனாலும் நீதி இல்ல. போலீஸ் கிட்ட போனாலும் நீதி இல்லன்னு. நீ அட்ரஸ் சொல்லு தலீவா. நாள பின்ன தேவைன்னா நாமளும் அலையாம அங்க போவம்ல.

வேறுவிதமாக சொல்ல வேண்டுமென்றால், இலங்கையில் நடத்தப்படும் இனவெறி தாக்குதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முழு ஆதரவோடு மட்டுமல்லாமல், முழு ஈடுபாடு கொண்ட ஆதரவுடன் நடத்தப்பட்டது.:ஜெ

ய‌க்கா! இத‌ கேட்ட‌துக்குதான்கா சீமானு, ம‌ணி எல்லாம் உள்ள. நீ கூட‌ ச‌வுண்டுட்டியே! திருமாவ‌ ஏன் புடிக்க‌லைன்னு. அந்தாளும் இதான் சொல்றாரு.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4656

நீங்க‌ளே பாருங்க‌ நைனா! அந்தாளு சொல்ற‌து இன்னா த‌லீவ‌ரு சொல்றது இன்னா? க‌ண்டுக்காம‌ விட்டா காணாம‌ பூடும்ல‌.


Saturday, March 7, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 8

காவல் துறை அனுமதி மறுப்பால் உண்ணா விரதம் 9ம் திகதி ‍ ‍‍-‍ ஜெ அறிவிப்பு

என்னாதான் காவல் துறைய உங்க கட்டுப்பாட்டில வெச்சிருந்தாலும் 9ம் நம்பர் உங்களுக்கு ராசின்னு பண்ணுவாங்களா? சுவாமி சொன்னாருங்களா 9ம் தேதி வேற உங்க நட்சத்திரம் வேற அன்னைக்கு வெச்சிண்டா ஓட்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்னு. பஞ்சாங்கம் பாக்காமலா திகதி சொல்லுவீங்க

இலங்கை ராணுவத்தை ஆதரித்த ஜெக்கு உண்ணாவிரதமிருக்க அருகதை இல்லை-‍ கலைஞர்

இதெல்லாம் ஓவர் தலைவா! ஆயுதமளித்தவர்களை ஒண்ணும் சொல்லிடப்படாதுன்னு உள்ள போடற நீங்க சொல்றப்போ அந்தம்மா எதாச்சும் சொல்லிச்சா?

ஜெ உண்ணாவிரதமிருப்பது குறித்து ஆராய தேவை இல்லை‍‍‍‍ -‍ வீரமணி

ஈழமே இல்லைன்னு சொல்ற , சண்டைன்னா சாவரது சகஜம்னு சொல்றவங்க ஓட்டுக்கு இருக்கிறஉண்ணாவிரதமே தேவை இல்லைன்னு அவங்க சொல்ல மாட்டாங்களாங்க?

ஜெ உண்ணாவிரதம் அரசியல் நாடகம் -‍ ஜி கே வாசன்

தேர்தல் வந்தாலும் வந்திச்சி. வாயே தொறக்காதவங்கள்ளாம் அறிக்கை விடறாங்கப்பு. ஆமாம் இவர யாருக்காவது தெரியுமா?

ஈழப் பிரச்சினை உள்ளவரை சீமான்கள் உருவாவதை தடுக்க முடியாது -‍ சத்தியராஜ்

பிரச்சினை ஈழத்தில இல்லைங்கண்ணோவ். அடிக்கிற ஜால்ரால. அம்மாவோட கோவத்தில. அரசியல் கூட்டணியில.

ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்கு தேர்தலில் நிற்காத கட்சிகள்தான் எங்களுக்கு வேண்டும்:தங்கர்பச்சான்

இந்தாளுக்கு ஆனாலும் லொள்ளு. அப்படி இருந்தா அது கட்சின்னு எந்த கேனயனாவது ஒத்துக்குவானா?

வன்னியில் குழந்தைகளுக்குப் பால் மா, சிறுவர்களுக்கு பயத்தம் கஞ்சி, பெரியவர்களுக்கு உப்புக்கஞ்சி வழங்க புலிகள் ஏற்பாடு ‍‍-‍ செய்தி

பட்டினி போட்டு குண்ட போட்டு சாவடிக்கிறவனுக்கு பேரு அரசாங்கம். இருக்கறத வெச்சி இப்படி பார்க்குறவங்களுக்கு பேரு தீவிரவாதி. நல்ல உலகம்டா சாமி.

இலங்கை தமிழர்களைக் பாதுகாக்க கோரி சென்னையில் 6 பார்வையற்றோர் நடைபயணம்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இப்படி பண்ணுறவங்க பார்வையற்றோர்னா, எங்கயோ நடக்குது எனக்கு என்னான்னு இருக்கிறவங்கள என்ன சொல்றது.

சீமானை பார்க்கப் போன டைரக்டர்கள் அமீர், சுந்தர ராஜன் கைது

பாரதி ராஜாவும் போய் இருந்தா வசதி. சீமான் என்ன சீட்டாட கை குறையுதுன்னா கேட்டாரு. போங்கடா!

Friday, March 6, 2009

கத கேளு கத கேளு

ஈசாப்னு கேள்வி பட்டிருப்பிங்க தானே. அந்தாளு ஒரு அடிமை. ஆனா அறிவாளி. அந்தாளோட முதலாளி ஏதோ ஒரு தேர்தல்ல தலைவராய்ட்டாங்க. தின்றதுக்குன்னு ஒரு கூட்டமில்லாம தலைவனா. அந்தாளுக்கும் இருந்தாங்க. விருந்துன்னு நச்சரிப்பு. அந்தாளு ஈசாப்ப கூப்டு நல்ல கறியா என்னல்லாம் இருக்கோ வாங்கிக் கொண்டு வந்து விருந்துக்கு ரெடி பண்ண சொன்னாங்க. சாப்பிட உக்காந்தா நாக்கு கறில வருவல், குழம்புன்னு வகை வகையா எல்லாம் நாக்கு. ஓசில தின்றதுக்கு அழகே குத்தம் சொல்றது தான. ஒருத்தன் கேட்டான். என்னா தலைவரே? நல்ல கறி சோறு போடுவிங்கனு வந்தா எல்லாம் நாக்கு கறினு. தலைவருக்கு அசிங்கமா போச்சி. கூப்டாரு ஈசாப்ப. என்னடா வேல இது. நல்ல நல்ல கறியா வாங்க சொன்னா இப்படின்னாரு. ஈசாப் அமைதியா, நாக்க விட உசந்த கறி என்ன இருக்க முடியும். முதல்ல ருசி தெரியரதுக்கு நாக்கு வேணாமா. எவ்ளோ நல்ல விடயமெல்லாம் சொல்லும் நாக்கு. அதாங்கன்னா ஆகா ஆகான்னு மண்டய ஆட்டிட்டு போய்ட்டாங்க.

அடுத்த தேர்தல்ல அய்யா ஊத்திக்கிட்டாரு. ஓசில தின்றவங்களுக்கு தோல்வின்னா என்ன வெற்றின்னா என்ன! சாப்ட ஒரு சாக்கு. நன்றி தெரிவிச்சி சாப்பாடு போடணும்னு முடிவாச்சி. கடுப்பில ஈசாப்ப கூப்டு மட்டமான கறி எல்லாம் வாங்கி வந்து சாப்பாடு பண்ண சொன்னாங்க. திரும்ப எல்லாம் நாக்கு கறி. கடுப்பாகி எகிறினாங்க. அதுக்கும் அமைதியா எசமான். நாக்க விட மோசமான ஒண்ணு உண்டுமா? வாய்க்கு வந்தத பேசறது, குடி கெடுக்கறது, இவ்ளோ ஏன் உடம்புக்கு ஆவாதுன்னாலும் இது கொடுக்கற டார்ச்சர்ல கண்டத தின்ன வெச்சி நோயாளியாக்கறதும் நாக்கு. அதான்னு பதில். தலைவரு அசந்து போய்ட்டாராம்.

(பி.கு. இந்த கடைசி சாதனைன்னு கப்ஸா விட்டது, சண்டைன்னா சாவரது சகஜம் தானன்னு சொல்லிட்டு இப்போ உண்ணாவிரதம் இருக்கறது இதெல்லாம் கவனம் வந்தா நான் பொறுப்பில்லை)

நறுக்குன்னு நாலு வார்த்த - 7

இலங்கைத் தமிழர் நலனுக்காக உண்ணா விரதம் --‍ ‍‍ ஜெ அறிவிப்பு!

அதானே. தேர்தல் மகிமையே மகிமை. அது சரி. அங்க இருக்கிற ஆளெல்லாம் ஈழத்தமிழர்னு சொன்னாலும் பிடிவாதமா இந்தம்மா இலங்கைத் தமிழர்னு தான் சொல்லும். நாள பின்ன ஈழத்தமிழருக்கு ஆதரவுன்னு கேஸ் வந்தாலும் எஸ்கேப். ஆமாம். சண்டன்னா சாவரது சகஜம்னு தான சொல்லிச்சி இந்தம்மா? அப்புறம் எதுக்கு இந்த வேல.

கலைஞர் ஓய்வு பெற வேண்டும் ‍ --‍ ஜெ

தோடா! எப்டியாவது முதலமைச்சர் ஆய்டணும். கலைக்கலாம்னா பா ஜ கவும் கை குடுக்கல. காங்கிரசுக்கு எதிர்காலம்னு மிரட்டல் விட்டாலும் கண்டுக்கல. அது சரி. இந்தமாக்கு ஓய்வு பெற வயசாகலையா?

இலங்கைத் தமிழருக்கு உதவ நிதி -‍ ஜெ

அய்யா திரட்டினா அமுக்கிட்டாருன்னு சொல்லிட்டீங்க. நீங்க என்னா பண்றிங்கன்னு எங்களுக்கு எப்படி தெரியுமுங்க. பக்சேட்ட குடுத்து குட்றான்னு சொல்லிடுங்க. இன்னும் கொஞசம் ஆயுதம் வாங்கி உதவுவாரு.

என்னை ஓய்வு பெற சொல்வதா -‍ ஜெவுக்கு கலைஞர் கண்டனம்.

அவங்க சொன்னா நாம கேட்ற போற‌மா? டென்ஷனாவாதீங்க தலைவரே.

13வது வயதிலிருந்து இன்று 85வது வயது வரையில் எழுதுகிறேன், எழுதுகிறேன் எழுதிக்கொண்டே இருக்கிறேன். ‍ -‍ கலைஞர்

அத்தனையும் காசு தலைவா. சும்மாவா மைக்கு வேஸ்டா? ஆனா மனோகரா வசனம் எப்பவோ எழுதினது. இப்ப உங்களுக்கு பொருந்துதுன்னு சீமான போட்டு கிராபிக்ஸ் போட்டிருக்காங்க. பார்த்து எழுதுங்க தலைவா.




இந்த "நீலி'' மேய்ச்சலுக்கு வரலாம் என்று கனவு காண்பதும் இரண்டுமே நடக்கவே நடக்காது. -‍ கலைஞர்

மாத்தி மாத்தி மேஞ்சிண்டு தான இருக்கிங்க. ஆமாங்க. இந்த வேலையே பயிர மேயரதுன்னு சொல்றது இதானாங்க.

திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? -‍ ஜெ கேள்வி.

நீங்க தானம்மா சொன்னீங்க. காவல் துறையை கட்டுப்படுத்த தெரியாத முதல்வர்னு. சொன்னா கேக்கவா போறாங்க. இவ்ளோ தகறாருக்கு காரணமான சுவாமியவே கைது பண்ணலயே. அத ஏன் கேக்க தோணாது.

பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் பற்றி பாரதியார் பாடி இருந்தால் எப்படி இருக்கும் -‍ வைகோ

என்ன அம்மாக்கு கோவம் வரும்னு அய்யா கைது பண்ணி இருப்பாரு. பண்ணலைன்னா பாரதியாரை ஏன் கைது செய்யலைன்னு அம்மா சவால் விட்டிருக்கும். அப்படி நிஜமா ஏக்கமா கேட்டிருந்தா தேனிசை செல்லப்பா பாட்டு மாதிரிதான் இருந்திருக்கும்.


Wednesday, March 4, 2009

கோக்கு மாக்கா கொஞ்சம் கேள்வி

பார்த்தியாபா பாகிஸ்தான் காரன் லொள்ள! பந்தாட்ற பசங்கள சுட்டதுக்கு தமிழ்நாடு தொடர்பிருக்காம். அவளோ சொரண இருந்தா இங்க இருந்து கிட்ட. இத விட்டு அங்க போய் அடிக்கராங்களா? இவனுங்க நல்லவனுங்கோ. எவ்ளோ அடிச்சாலும் தாங்கரானுங்கன்னு நக்கல் தான? சொல்லுங்கடா. ஒபாமாக்கு ஒன்னுக்கு வரலைன்னா கூட நாங்கதான்.

புலிகளைப் பத்தி பேசற அரசியல் தலைவர்களை கைது செய்யணுமாம் சாமி சொல்லிக்கிறான். இவன மாதிரி ஒரு கேடி பக்கர் பர்க்கலபா நானு. அம்மா கச்சி அய்யா கச்சி தவிர மத்தவங்க பேசராங்கன்னு அல்லாரையும் அமுக்கிட்டா சென்டர் எனக்கு ஸ்டேட் உனக்குன்னு பேரம் பேசவா?

கீர வாடினாப்பல கீதுன்னு கட்டு 5 ரூபா சொன்னா 4 ரூபாய்க்கு கேக்குறானுங்களே. கசங்கி போன டாலர்னு 45 ரூபாய்க்கு தருவியா, பாலிஸ் இல்லாம கீதுனு சவரன் 8000 ரூபாய்க்கி தருவியானு ஏன் கேக்க மாட்டானுங்கோ?


குப்ப குப்பயா ஜனங்கள சாவடிக்கறப்போ கமுக்கமா இருந்து இப்போ பந்தடிக்க போன பசங்கள பாய் அட்சிட்டானு அத்வானி கூட மீட்டிங் போட்டாராமே பிரணாப்பு. இன்னா கத தலீவா? இப்போ பொசலடிக்கல உனக்கு?

இலங்கைத் தமிழர்களைக் காக்க பா ஜ க வினால் மட்டுமே முடியும்னு அல்ட்ரானே பேமானி. இவன் தான வெள்ள காரன் லிஸ்ட்ல கீதுபானு தீவிரவாதின்னு சொன்ன பரதேசி. பக்சே தான் அட்சுனுக்கறானே அங்க கீறதெல்லம் பிலினு. இப்போ மட்டும் தீவிரவாதி இல்லாம பூடுமா? போடாங்.

அட்சி சாவடிங்கடான்னு சொல்லிட்டு சம்சாரத்த இட்டுகினு நேபால் போன பக்ஸே அவன் ஆள அட்சிட்டாங்கன்னு ஓடியாந்தான் பாரு. ஏன். அவங்காளுக்கு வந்தாதான் ரத்தமா? அவன் கிட்ட குண்டு வாங்கி அப்பாவிங்கள அட்சப்போ அல்வா துன்னா மாதிரி இருந்திச்சா?

இன்னாங்கடா எல்லா கச்சி காரனும் வக்கீலுங்களுக்கு சப்போர்டுன்னு டவுட்டுபா? கண்டுக்காம விட்டா கருப்பு கோட்ல செவப்பா ரத்தம் இருக்கறத போடோ புட்சி அல்லாம் நம்ம கச்சி கார பசங்கோன்னு கலைஞர் அலம்பல் பண்ணுவாரோன்னு உசாரா இருக்காங்களோ?

40 சீட்ல அம்மா கச்சி கெல்ச்சா அம்மாவ பிரதமாராக்கரேன்னாரே சாமி. அம்மா சசிகலாவ முதலமைச்சராரக்கரேன்னு சொல்லுமோ? அப்டி கண்டி நட்ந்திச்சி எல்டாம்ஸ் ரோட் பிளாட்பாரத்தில என் டென்ட் எனக்கில்லாம பூடுமே?

இந்த கோவில் சண்டைல போயும் போயும் சாமி தானா வக்கீலா கெட்சாங்க. மவனே, பாதி கேஸ்ல இப்போதான் சி ஐ ஏ காரா எவிடன்ஸ் குடுத்தா. சிவனோட புள்ள சுப்பிரமணிய சாமினு சிவபுராணத்துல கீது. நாந்தாம்பா வாரிசுன்னு லவட்டிகினு, பட்ட போட்ட நெத்தில நாமத்த போடமாட்டாரா? சிவ சிவா போய் கோவிந்தா கோவிந்தா ஆய்டுமேபா?

யான பட்தாலும் குதுர மட்டம்னு சொல்லும் நம்ம பெர்சு. கரீட்டு தாம்பா. தலீவரு பாரு. தேர்தல் டேட் சொன்னப்புறம் டிவி பொட்டி, வெள்ள துட்டு குட்தா எதிர் பார்டிங்க எகிறுவாங்கன்னு கபால்னு வன்னியர் பொது சொத்து நல வாரியம் அறிவிச்சி டாக்டரையாவ வள்சி போட்டார் பார்த்தியா?

எலக்சனுக்கு தேதி சொல்றானுங்களே. கலக்சனுக்கு ஏன் சொல்ல மாட்டானுங்க. ஓட்டு எண்ணி முடியர வரைக்கும் கறந்துட மாட்டானுங்கோ?

தங்கம் இந்த வெல விக்குதே! எப்டி லட்டுக்குள்ள மூக்குத்தி, மோந்திரம்னு வெச்சி ஓட்டு சுடுவானுங்கோ?

இந்த ஓட்டு மிசின்ல கள்ள ஓட்டு போட முடியாதுன்னு அதிகாரிங்களும், முடியும்னு கச்சிங்களும்( இவங்க சொன்னா நிசமாத்தான் இருக்கும்) ஏன் கூவணும். பட்டன் அய்த்த சொல்லோ மூஞ்சிய போடோ புடிக்க முடியாதா? அப்டி கண்டி மிசினு இருக்கட்டுமே. ஒத்துக்குவானுஙன்ற?

இவ்ளோ கட்சி காரனுங்க இருக்கறானுங்கோ. போர நிறுத்த சொல்லு. அப்பாவி ஜனங்க சாவுதுன்னு கூவரானகண்டி எவன்னா அடிக்கறதுன்னா தானடா ஐ நாவ கேக்கணும். அரிசி ,பருப்பு, பால் மாவு, மருந்துன்னு குடுக்க எவனடா கேக்கணுன்னு ஏன் கேக்க மாட்ரான்?

தேளு கட்ச கொரங்கு கணக்கா குச்சினு குச்சினு இருந்தார தொங்கபாலு? இன்னா சவுண்ட காணோம். பீட்ர பேச வுட்டு அம்பேல் ஆய்ட்டாரு? அம்மா சொல்லி இருக்குமோ? ஓவரா ஊத்தாதடி. அடங்குன்னு?

ஆமாம்! தலீவரு உண்ணாவிரத‌ம்னாரு. ஒரு பய கண்டுக்கல. அப்பால கேன்ஸல்னு சொன்னாரா?

(இந்த பழைமைபேசி படிச்சமா. நம்ம தமிழே மறந்துடும்னு பயம் வந்துடுத்து. அது தான் சொல்லி பார்த்துகிட்டோம். அகராதி எல்லாம் போட்டால் அவமரியாதைன்னு தான் போடலை. தெரியலன்னா கேட்கலாம். கூச்சம் வேணாம். இஃகி ஃகி )

Monday, March 2, 2009

S.O.S

கலைஞர் அய்யா அவர்களுக்கு,

பைத்தியக்காரப் பாமரன் எழுதும் விண்ணப்பம். இன்னைக்கு ஒரு தகவல் பார்த்து ஆடிப் போய்ட்டங்கையா. ஏற்கனவே நம்மள பைத்தியமாதான் நீங்க உள்பட நினைக்கிறீங்க. இருந்தாலும் அடிக்கிற சாமின்னாலும் அவன் கிட்ட தானுங்களையா கேக்க முடியும். இந்த மகிந்தா மிருகத்துக்கு நாம எவ்வளவோ ஆதரவா முடிஞ்ச அளவு உதவி பண்ணி அவனுக்கே தெரியாத இறையாண்மை எல்லாம் சொல்லிக் குடுத்து அவன் இப்போ நிஜமாவே யோவ் நிறுத்துன்னா சும்மா தான சொல்றிங்க. அடிக்கறது போறலைன்னு தானே நக்கலுன்னு இன்னும் வேகமா அடிக்கிறான்.

ஆனாலும் பாருங்கய்யா. நெம்ப நாளைக்கப்புறம் பிரணாப் அய்யா போரை நிறுத்துகனு உங்களுக்கு தென்றல் வீசினாங்கள்ள. நீங்க சொன்னா உடனே 48 மணி நேரம் நோ ஃபைடிங்னு சொல்லுவாங்கள்ள. அய்யோ! பயப்படாதீங்க. உங்க சங்கடம் புரியுது. போரை நிரந்தரமா நிறுத்த சொல்லுங்கன்னோ, ஈழம் மலர வழி பண்ணுங்கன்னோ கேட்ர மாட்டனுங்க. அது அவங்க பார்த்துக்குவாங்க. நாள பின்ன நேர்ல பார்த்து துப்பறா மாதிரி கேட்டாலும் ஒரு அய்யகோ போடமாட்டமா. அதெல்லாம் வேணாம்யா.

அது வந்து என்னா தகவல்னா இந்த மகிந்த அய்யாக்கு நம்ம நாட்டு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் எமிரைடஸ் பேராசிரியர் பட்டம் குடுத்து இருக்காம்யா. அதுவும் மனித உரிமைக்கான போராட்டங்களுக்கு. அரசியல் வேறைய்யா! அது மறந்துடுவம். நாளைக்கே உங்களுக்கு புத்தி மாறி ஈழம் பிறக்க வேண்டும்னு எங்கள எல்லாம் உசுப்பி விட்டு அது தானா கிடைக்கறப்பன்னாலும் என்னாலதான்னு சொன்னா ஆமாம் ஆமாம்னு சொல்லுவோம்யா. ஆனா இது அனியாயம் இல்லைங்களா. வரும் தலைமுறைல ஏதோ ஒண்ணு இத்த ஆராய்ச்சி பண்ணி இவனுக்கு போய் இத குடுத்தாங்களே! இது எல்லாம் என்னனு கேட்டா நம்ம பேரபுள்ளைங்க எங்கள மாதிரி இல்லாம மான ரோசமா இருந்து நாண்டுக்குமில்லிங்களா?

அதாம்யா. நம்ம பிரணாப் அய்யா சொன்னா இலங்கை அரசாங்கமே கேக்குறப்போ அவங்க ஊரு பல்கலைக் கழகம் கேக்க மாட்டாங்களாய்யா? அந்த பட்டத்த புடுங்க சொல்லுங்கையா! டொனேசன் குடுத்தான் குடுத்தம். திரும்ப கேட்டான்னு கேள்வி வந்தா? மானமாச்சே. விட்ரமாட்டம்யா. ஆளுக்கு ஒரு எட்டணா ஒரு ரூவான்னு குடுப்பம்யா. புடுங்க சொல்லுங்கையா. வேதனைல்லாம் ஒரு பக்கம் கெடாசிட்டு சாதனைன்னு கொண்டாடுவம்யா. இப்பிடியாவது கொஞ்சம் நம்ம இறையாண்மைய காப்பாத்தலாம்ங்கையா.

எப்பவும் போல நம்பி
பாமரன்.

நறுக்குன்னு நாலு வார்த்த - 6

அறுவைச் சிகிச்சை மூலம் கிடைத்த இந்த உயிர் இனிமேல் உங்களுக்குதான் - கலைஞர்

அய்ய வேணாம். அத வெச்சி நாங்க என்ன பண்ண போறம். அப்படின்னா மறுபிறவி கணக்கா? அய்யா முடிஞ்சா இந்த பிறவிலயாவது மனுசனா இருங்கையா.

போர் நிறுத்தம் வேண்டும் என்று பிரணாப் சொன்னது இனிய தென்றலாய்இதயத்தைக் குளிர்விக்கிறது - கலைஞர்

இதெல்லாம் ஒரு பிழைப்பா. நம்பிட்டோம்ல. வெக்கமா இல்ல. இதை நீர் சொல்லிஇருக்க வேண்டும். நல்ல காலம். நான் சொல்லித்தான்னு சொல்லலையே.

ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி முதல் இலவச தொலைக்காட்சி பெட்டி வரைசாதனை.. இதெல்லாம் வேறெங்குமில்லை தமிழகத்தில் தான் - தி மு

பின்ன. ஈழத்து ஓட்டும் இங்க செல்லும்னா அதுக்காகவாவது கொலையதடுத்திருக்கலாம். இல்லன்னு தான விட்டிங்க ..அந்த சாதனைய சொல்லுங்கப்பா

சட்டத்தோட ரெண்டு கையவுமே ஒண்ண ஒண்ணு ஒரு புறம்போக்குக்காகஅடிச்சிக்க வச்சிங்களே அத சொல்லுங்கப்பா.

மானத்துக்கு உசிருக்கு நம்ம ரத்தம் மொத்தமா சாவரப்போ காமெடி சானல்ஆரம்பிச்சத சொல்லலையேப்பா.

ஆனாலும் இவ்ளோ தன்னடக்கம் ஆகாதுபா உங்களுக்கு

சுப்ரீம் கோர்ட்டில் நெத்தியடி வாங்கியது யார்? ஜெ கேள்வி?

பன்னாடைங்களா? நாறிப்போன விஷயத்துக்கு இப்படி எல்லாம் கேள்விவேறயா? நீங்க வாங்காத நெத்தி அடியா. பதிலுக்கு அவரு கேப்பாரு. இதெல்லாம்நாங்க கேட்டு மண்ட இடி தான் மிச்சம்.

தமிழக அரசியல் ஒரு சாக்கடை- சுவாமி

அதான் இந்த பன்னி இங்க உழளுதா? தூ.

தாய் வீட்டுக்கு வந்தாற்போல் உணருகிறேன் - அதிமுக வுக்கு திரும்பிய ராஜகண்ணப்பன்

அங்க போனப்பவும் இப்படி தான சொன்னது. எவனாவது மாமியார் வீடுன்னுசொல்றிங்களா? அதுக்கு அர்த்தம் வேற இல்ல? இப்ப என்ன. எலெக்சன் முடியஅமைச்சர் பதவி தரலைன்னா திரும்ப அந்த அம்மா வீட்ட போவிங்க. அவ்ளோதானே?

திமுக வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் - திமுக

அவிங்க என்ன கேனையா? அடிச்சப்ப கேட்டா அடிச்சாங்க எந்த கச்சி நீயின்னு?

தற்போதைய நிலைமையில் புலிகள் வசமுள்ள பகுதியை முழுமையாக அழித்துவிட்டு அப்பகுதியை மீட்கும் சக்தி இராணுவத்தினரிடம் உண்டு--பாலிதகொஹன‌

புல்லு பூண்ட கூட விட்றப்படாது. அப்படி மீட்டு என்னா பண்ண போறான் இவன்.

ஜனாதிபதி மஹிந்தவிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு

மனுசன்யா. இவ்வளவு தூரம் வாய தொறக்காம அல்லது பேருக்கு கத்திண்டுஇருந்ததுக்கு நேர்ல நன்றி சொல்லலைன்னா எப்படி. என்ன ஒரு துணிச்சல் அல்லது நக்கல். இங்க வந்து சந்திக்கராராம்ல. அப்புறம் ஒரு பய இங்க தமிழு, தொப்புளு கொடின்னு பேசிடுவானுவ?

வவுனியாவில் உள்ளஅகதிகள் முகாம்சித்திரவதைக் கூடமாகஉள்ளது என்பது புலிகளின்திட்டமிட்ட பொய்பிரசாரம் ஆகும். கருணா


ஆமாம்டா. அது அங்க இருக்கற சனங்களுக்கு. உங்களுக்கெல்லாம் அது சொர்க்கம் தானடா. நாய் கூட சில நேரம் குலைக்கும். நீ எல்லாம் என்ன ஜென்மமடா.

தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேருகின்றது. ஆனால் இந்தியா எமக்கு பாதகமாக செயற்படாது என்பது உள்ளார்ந்த ரீதியாக எமக்கு தெரியும். லக்ஷ்மன் யாப்பா

எங்களுக்கும் தெரியும்டி. ஆனா பாரு எங்க தலைவருக்கு தென்றல் வீசுதாம். அங்க சொல்லு.

நான் உட்பட சில தலைவர்களால் உருவாக்கப்பட்டவர்தான் பிரபாகரன். -- கருணா

உன்ன என்னான்னு தான்சொல்றது தெரியலையே? இந்த அலம்பல் தாங்காமதான் உன்ன நாடுகடத்திட்டங்களா? வெள்ளக்காரன்விவரமானவனப்பா.

50 காசுக்கு இந்தியா முழுதும் பேசலாம்- கலைஞர்

அதுல பேசினா புடிச்சி உள்ள போடமாட்டிங்கன்னு உத்தரவாதம் இருக்கா?