Thursday, February 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 5

காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத கையாலாகாத முதல்வர் ‍ ஜெ

அட இழவே! சுயமாக இயங்கவேண்டிய ஒரு அமைப்பை கட்டுபடுத்தி வெச்சிருந்த அசிங்கத்த இப்படியா போட்டு உடைக்கிறது?


முதல்வர் உண்ணாவிரதத்தைக் கைவிடும்வரை சாகும் வரை உண்ணாவிரதம் ‍- அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

இவரு கை விடும் வரை யாரு எது வரை உண்ணாவிரதம் இருக்கப் போறா!

முதல்வர் உடல் நலம் பெற்று திரும்பும் வரை சால்வை, மாலைகள் வேண்டாம் ‍- அமைச்சர் வீராசாமி

அது போடைலைன்னா பேச வருங்களா? என்னா தியாகமப்பா.

உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அரவது சகாக்களும் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டுமெனஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்!

சை! குடிச்சா கூட இப்படி உளறுவானா? எல்லாம் இந்த கருணாவால வந்த வினை. எல்லாரையும் அப்படி நினைக்க சொல்லுது. தாடி மிஞ்சாதடியோ! பார்த்து.

மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது கூட படையினர் விமானத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் போன்றவற்றை நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்‍‍‍‍ -‍ கோத்தபாய

அதானடா சொல்றது வெண்ண! வலயத்துக்குள்ள நம்பி வந்தவங்கள அடிச்சே மாளலை. இதில மத்த இடத்துல அடிக்கறதெங்க? வந்தூட்டான். கோணவாயி..தூ..

இந்து மஹா சமுத்திரத்தை நோக்கிதான் ராடார் வைக்கப் பட்டிருக்கிறது‍‍‍‍-‍ பீட்டர் அல்போன்ஸ்

அதை இங்க வெச்சா வெக்கப்பட்டு திரும்பிக்குமாங்கண்ணா?

ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்

தலைவர் ஆசுபத்திரில..இல்லன்னா அவருக்கு குடுத்தே மாளாது

22 comments:

Eezhapriya said...

அது என்ன சார் நான் செலக்ட் பண்ண விஷயம் நீங்க போஸ்ட் பண்றீங்க. ஹ்ம்ம்.. சரி எப்டியோ நல்ல முயற்சி.. காரம் கொஞ்சம் தூக்கலா போடுங்க சார், சப்ன்னு கெடக்கு!

Bala said...

அப்டிங்கறீங்க! போட்ருவம்!

Eezhapriya said...

//காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத கையாலாகாத முதல்வர் ‍//

அது ஒண்ணுமில்ல அம்மணி, போலீஸ்-கு உங்க ஆளுங்கள மாதிரி சட் னு கால்ல விழ கஷ்டம், நாசமா போன தொந்தி பாருங்கோ! அதில்லாம, நீங்கன்னா தொந்தின்னாலும் உதைச்சிங்கன்னாக்க தொப் னு விழுந்துடுவாங்க, ஐயாக்கு வயசாயிடுத்தோ இல்லையோ முடியல!

Eezhapriya said...

"முதல்வர் உண்ணாவிரதத்தைக் கைவிடும்வரை சாகும் வரை உண்ணாவிரதம்"

ஐயோ, இந்த சமாசாரம் எனக்கு தெரியாம போச்சே! யாருக்கு தெரியும் நாளைக்கு "ச்தூ" சை.. இந்த யுனிகோட் ரொம்ப மோசம்பா.. "சோ" ஐயா "ஜெ" அம்மாவும், "முதல்வர்" ஐயாவும் கை புடிச்சிக்கணும், இல்லைனா நான் மொட்டை போடுவேன்னு! ஆரம்பிச்சாலும் ! ஆரம்பிப்பாங்க!

Eezhapriya said...

//முதல்வர் உடல் நலம் பெற்று திரும்பும் வரை சால்வை, மாலைகள் வேண்டாம்//

ஆமாம்பா.. ஒரு (நல்ல) வேளை, காக்கா உட்கார "கொய்யா" "பழம்" விழுந்த கதையா, மண்டைய கிண்டிய போட்டா இந்த மாலை மரியாத தேவைப்படலாம்! இப்பவே மிச்சம் பிடிச்சி வைங்கோ!

Eezhapriya said...

//உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அரவது சகாக்களும் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டுமெனஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்!//

http://eezhapriya.blogspot.com/2009/02/blog-post_26.html << நம்ம கடுதாசிய பாருங்கோ! சத்யமா விளம்பரம் இல்ல!

Eezhapriya said...

//மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது கூட படையினர் விமானத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் போன்றவற்றை நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்‍‍‍‍ -‍ கோத்தபாய//

"ஊமை இருக்குற ஊர்ல உளறு வாயன் புலவனாம்" .. அப்டின்னா அரசு கட்டுப்பாடற்ற பிரதேசங்கள் நிறைய உண்டு போலயே!
அடங்கொக்கமக்கா அத விட விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது கூட << அப்டின்னாக்க தெரிஞ்சும் தாக்காம இருக்காங்கன்னும், ஜனங்களுக்கு கூட அடிக்கறாங்கன்னும் உளறுமொழி சாரி.. உறுதிமொழி கொடுக்கிறாங்களோ"

Eezhapriya said...

//இந்து மஹா சமுத்திரத்தை நோக்கிதான் ராடார் வைக்கப் பட்டிருக்கிறது‍‍‍‍-‍ பீட்டர் அல்போன்ஸ்//

ஹலோ வணக்கமுங்க உடான்ஸ் சாரி அல்போன்ஸ் .. உங்க விளக்கத்துக்கு நன்றிங்க! இன்னைக்கு பக்கத்துக்கு வீட்டு அடுப்பில வெந்த மீன் எல்லாம் இந்து சமுத்திரத்தில எங்க இனத்தை வேவு பாக்கத்தான் ராடார் வச்சிருக்காங்க நாசமா போவானுங்கன்னு கத்தினத நான் என்னோட ரெண்டு காதாலையும் கேட்டேனுங்கோ! அட நெசம்மதானுங்கோ!

Eezhapriya said...

//ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்

தலைவர் ஆசுபத்திரில..இல்லன்னா அவருக்கு குடுத்தே மாளாது//

அட என்னங்க நீங்க, ஆஸ்கார் வச்சி ஐயா என்னங்க பண்றது, ஒரு பென்ஸ் கார் இல்லேன்னா ஒரு அம்பாஸிடர்.. அட ஒரு அவிஞ்சு போன ஆர்மட் கார் .. அது கூட வேண்டாம் ஒரு புகார் ஆவது கொடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்!

Bala said...

ஒத்துக்கறேங்க பிரியா! நாலு வார்த்த தான் நம்மளுது. நறுக் உங்க பின்னூட்டத்தில.

Eezhapriya said...

அட என்னங்க சார் நீங்க என்னமோ நான் உங்க கூட போட்டிக்கு வந்த மாதிரி இப்டி சொல்லிப்டிங்க.. நம்ம வயித்தெரிச்சல நாம கொட்டினோம்! அம்புட்டுதனுங்கோ!

Bala said...

அய்யோ! போட்டியா? இதான வேணாம். நிஜமான பாராட்டுங்க அது!

Eezhapriya said...

ம்ம்.. நம்பிட்டேனுங்க! நன்றிங்க!

S.R.Rajasekaran said...

\\இந்து மஹா சமுத்திரத்தை நோக்கிதான் ராடார் வைக்கப் பட்டிருக்கிறது‍‍‍‍-‍ பீட்டர் அல்போன்ஸ்\\


அண்ணாச்சி அத கொஞ்சம் எங்க வீட்டு பக்கம் திருப்பி வைக்க சொல்லுங்க "ஸ்டார் மூவி" சரியாவே தெரிய மாட்டேங்குது

S.R.Rajasekaran said...

யப்பா முடியல நாளைக்கு வாரேன்

pukalini said...

முடியல..

S.R.Rajasekaran said...

\\\மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது கூட படையினர் விமானத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் போன்றவற்றை நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்\\\

எங்கனா நீங்க விடுறீங்க கட்டுக்குள்ள போயி புகுந்து அடிக்க ரெம்ப கஷ்டமா இருக்குன்னு ரெம்ப ஆறுதலா பேசி வெளிய கூட்டிட்டு வந்து கழுத்தருக்குரததான் உங்க ஆளே சொல்லுது .நீங்க எந்த மக்களை பத்தி சொளுரிங்கன்னு தெளிவா சொல்லுங்கன்னா

S.R.Rajasekaran said...

\\சை! குடிச்சா கூட இப்படி உளறுவானா? எல்லாம் இந்த கருணாவால வந்த வினை. எல்லாரையும் அப்படி நினைக்க சொல்லுது. தாடி மிஞ்சாதடியோ! பார்த்து.\\


சரி தான் பாலா

S.R.Rajasekaran said...

\\முதல்வர் உண்ணாவிரதத்தைக் கைவிடும்வரை சாகும் வரை உண்ணாவிரதம் ‍- அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.\\


அண்ணே அடுத்த முதல்வர் நீங்கதான் அப்படின்னு யாரும் சொல்ல மாட்டாங்க

பழமைபேசி said...

pakidi, orae pakidi!!

S.R.Rajasekaran said...

\\காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத கையாலாகாத முதல்வர் ‍ ஜெ\\


அம்மா தாயே வணக்கம்.இருந்தாலும் உங்க அளவுக்கு பெருசுகிட்ட தெறம இல்லைதான்

Bala said...

ஆமாம். இந்த பகிடி மட்டுமில்லைன்னு வைங்க. பாதி பேரு பைத்தியமாதான் திரியணும்.