Friday, February 20, 2009

நறுக்குனு நாலு வார்த்தை

ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுக்கத் தயார்:காங்கிரஸ்

தோடா. ஒரு ஆள சொல்லியே இவ்ளோ உயிர் போறதும் சரின்னு சொல்லிண்டிருக்கீங்க. இதுல இது வேற. ஏண்டா. உசிர குடுத்தவன கட்சிக்காரனே இல்லன்னு சொன்னீங்க. இப்போ எப்படி.

ஈழப்பிரச்சனை: திமுகவும், அதிமுகவும் சேர்ந்து போராடினால், அவர்களுடன் சேர்ந்து தேமுதிகவும் போராடும்: விஜயகாந்த்

நல்ல நேரம் பார்த்தானுங்க பாரு ஜோக் அடிக்க. தூ. வடிவேலுக்கு போட்டியா காமெடியனா முயற்சி பண்ற வேலையா?

சேலம் மத்திய சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ளனர்.20.02.09 ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் போரை நிறுத்த வலியுறுத்தியும், ஆயுத உதவி செய்யும் மத்திய அரசை கண்டித்தும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உள்ள இருந்ததால மனுசங்களா இருக்காங்கப்பா.

காந்தியின் பெயரையும் வைத்துக் கொண்டு என்னுடைய அருமை நண் பன் கண்ணதாசன் பெயரை யும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை:கருணாநிதி


ஏங்க! இது ரொம்ப ஓவரா தெரியல. கருணையே இல்லாம அறிக்கையும் விடாம இவ்ளோ பேரு சாவரப்போ காங்கிரஸ சொல்லவேணாம்னு சொன்னிங்களேங்க. அத விடவாங்க?

சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீச்சு. கருணா நிதி வேதனை.

பின்ன? அதென்னா தமிழர் ரத்தமா? கழுவினா போறதுக்கு. இல்லாட்டி சிதம்பரம் கோவில்ல உண்டி வெக்க சொல்லிட்டா. திமுக. அதனாலதான் நான் கோர்ட்கு வந்தேன். என் மேல முட்ட அடிச்சிட்டா. அதனால ஆட்சிய கலைக்கணும். சி கூபட்ணும்னு குடைச்சல் குடுப்பாங்கன்னா?

ஈழப்பிரச்சனை: விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமெரிக்க தூதரகத்தில் மனு

இதுக்கு திமுக அதிமுக எல்லாம் வேணாமா கேப்டன்.

விடுதலைப்புலிகளுடன் படையினர் 18 மாதங்கள் சண்டையில் ஈடுபட நேரும்: கருணா தெரிவிப்பு


வெறும் 700 பேருக்கா. பக்சேயும் மதிக்க மாட்றான். பிள்ளையானும் மதிக்க மாட்றான். கோட்டும் சூட்டும் போட்டாலும் கோத்தவாயும் மதிக்க மாட்றான். நன்றி கெட்ட நாய்ங்க. தூன்னு துப்பிடாதீங்ணா. உங்க மூஞ்சில விழும்.

காங்கிரசுக்கு எதிர்காலம் வேண்டுமென்றால் திமுக கூட்டணியை விட்டுவெளியே வாருங்கள். திருமண விழாவில் ஜெ. பேச்சு!

61 ஜோடிய சேர்த்து வெச்சி ஒரு ஜோடிய பிரிக்க பார்கறீங்களே. யாரும்வாழ்ந்துடப்படாது.

தமிழக பட்ஜெட்: தொலை நோக்குப் பார்வை இல்லை. ஜெ கண்டனம்.

பின்ன. தொலைக்காட்சி பெட்டி குடுத்தா. பைனாகுலர் தரணும் போல.

புலிகள் வைத்திருப்பது கேடயம்- ராணுவம் வைத்திருப்பது கத்தி : விஜயகாந்த் பேச்சு

நீ போய்யா தத்தி

12 comments:

பழமைபேசி said...

மறுமொழிகள் வெகு தூக்கலாவும், நேர்த்தியாவும் இருக்கு...

S.R.Rajasekaran said...

\\புலிகள் வைத்திருப்பது கேடயம்- ராணுவம் வைத்திருப்பது கத்தி : விஜயகாந்த் பேச்சு\\


எப்படி தல கரெக்ட்டா கண்டுபுடிசிங்க .ஏது ரெம்ப நாலா ஆளே காணோம் .ஏதும் பாரின் டூரா.உங்கள வச்சி யாரும் படமும் எடுக்கலியே

S.R.Rajasekaran said...

\\தமிழக பட்ஜெட்: தொலை நோக்குப் பார்வை இல்லை. ஜெ கண்டனம்.\\


ஆத்தா நீ போட்ட தொலை நோக்கு பார்வைதான் சரி .
அதனால அய்யா பட்ஜெட்ட எல்லாரும் தொலை நோக்கு கண்ணாடி கொண்டு பாக்கவும்

S.R.Rajasekaran said...

\\காங்கிரசுக்கு எதிர்காலம் வேண்டுமென்றால் திமுக கூட்டணியை விட்டுவெளியே வாருங்கள். திருமண விழாவில் ஜெ. பேச்சு!\\


ஆமா செலுவிய M.G.R கைய புடிச்சி கூட்டுக்கிட்டு வந்தாராம் அதனால உங்கள அம்மா கைய புடுச்சி கூப்பிடுறாங்க

S.R.Rajasekaran said...

\\விடுதலைப்புலிகளுடன் படையினர் 18 மாதங்கள் சண்டையில் ஈடுபட நேரும்: கருணா தெரிவிப்பு\\\ஆமா ஆமா லண்டன்ல போயி ஜோசியம் பாத்துட்டு வந்துட்டான்யா இந்த ஆளு

S.R.Rajasekaran said...

\\\ஈழப்பிரச்சனை: விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமெரிக்க தூதரகத்தில் மனு\\\


தமிழ் நாட்டுல மொத்தம் 345 தொகுதி இருக்கு .அதுல மொத்தம் 420 எம்பியும் 459 எம் எல் எ இருந்தும் யாரும் மனு கொடுக்க வரல .அதனால நானே ஒரு ஆப் அடிச்சி கண்ண செவக்க வச்சி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுத்துட்டு ,உடனடியா அமெரிக்க முதல்வர் பில்கேட்ஸ் ச எனக்கு போன் போடசொல்லு ன்னு சொல்லிட்டு நான்தான் உண்மையான தமிழன்னு நிருபிச்சிட்டு வந்துட்டேன்

S.R.Rajasekaran said...

\\\சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீச்சு. கருணா நிதி வேதனை.\\\எனக்கு ரெம்ப பிடிச்ச தலைவர் .அவரது கட்சியில் உறுப்பினர் கார்டு வாங்க இன்னமும் காத்து இருக்கின்றேன் .என்னது முட்டைய அடிச்சிட்டாங்களா சானியதான் கரைச்சி ஊத்துனதா கேள்விபட்டேன் அடப்பாவிங்களா நீங்க நல்லா இருப்பிங்களா உங்களுக்கெல்ல நன்றி விசுவாசமே இல்லியா .மும்பைல தாக்குதல் நடக்கும் பொது எத்தன உயிர காப்பாத்தினார்,டெல்லில பாராளு மன்றத்த தாக்கும் பொது பிரதமரையே எங்கதலைவர் காப்பாத்தினார் ,அது ஏன் ஈராக்குல புஷ் மீது ஷூவ கலட்டி எறியும் பொது இவர் மட்டும் இல்லன்னா இன்னைக்கு புஷ் இல்ல .அவ்வளவு பெரிய தலைவர வெறும் முட்டை மட்டும் கொண்டு எரிந்தது தமிழ்நாட்டுக்கே அவமானம் இதை நாங்க ஐ நா வரைக்கும் கொண்டு போவோம்

S.R.Rajasekaran said...

\\உள்ள இருந்ததால மனுசங்களா இருக்காங்கப்பா.\\


உள்ள இருக்கிறதால மனுசனா இருக்காங்க

S.R.Rajasekaran said...

\\ திமுகவும், அதிமுகவும் சேர்ந்து போராடினால், அவர்களுடன் சேர்ந்து தேமுதிகவும் போராடும்: விஜயகாந்த்\\\


அவங்க நாண்டுகிட்டு நின்னா இவரும் நாண்டுக்கிட்டு நிப்பாரு.ஏன்யா சொந்தமா ஒண்ணுமே தெரியாதா

S.R.Rajasekaran said...

\\ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுக்கத் தயார்:காங்கிரஸ்\\


எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்க இவனுங்க ரெம்ப நல்லவங்க .கேக்குறவன் கேனக்....யா

சக்(ங்)கடத்தார் said...

ஈழப்பிரச்சனை: திமுகவும், அதிமுகவும் சேர்ந்து போராடினால், அவர்களுடன் சேர்ந்து தேமுதிகவும் போராடும்: விஜயகாந்த்

நல்ல நேரம் பார்த்தானுங்க பாரு ஜோக் அடிக்க. தூ. வடிவேலுக்கு போட்டியா காமெடியனா முயற்சி பண்ற வேலையா?//

ஸப்பா....என்னமா யோசிக்கிறீங்கள் பாலாஜி?

பொழைச்சுப் போகட்டும் விடுங்கோ?

சக்(ங்)கடத்தார் said...

விடுதலைப்புலிகளுடன் படையினர் 18 மாதங்கள் சண்டையில் ஈடுபட நேரும்: கருணா தெரிவிப்பு

வெறும் 700 பேருக்கா. பக்சேயும் மதிக்க மாட்றான். பிள்ளையானும் மதிக்க மாட்றான். கோட்டும் சூட்டும் போட்டாலும் கோத்தவாயும் மதிக்க மாட்றான். நன்றி கெட்ட நாய்ங்க. தூன்னு துப்பிடாதீங்ணா. உங்க மூஞ்சில விழும்.//


ஏனாம் இன்னும் புலிகளை ஒழிக்கேல்லை?? வன்னியிக்கை இன்னும் ஒரு வீதப் புலி தானே இருக்கு???/