Monday, February 23, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 4

கருணாநிதி

தமிழகத்தில் வன்முறை தடுக்கப்பட வேண்டும்‍‍‍ சோனியா ஆவேசம்

ஆட்சியைக் கவிழ்க்க சதி. அய்யோ அம்மா நீங்களா. அம்மா சொன்னாங்கன்னா ஜெயாம்மான்னு நினைச்சிட்டேன்.


போராட்டம் தொடர்ந்தால் மருத்துவமனையில் உண்ணாவிரதம்.

செம ஸீனு! இவ்ளோ சொல்லிட்டு கைவிட வேண்டும் கு என்ன கோஷம்னு சொல்லலைங்களே!


மருத்துவ மனையில் இருந்தாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியினை......பி எஸ் என் எல் துவக்க விழாவில்

எப்பவாவது எந்த பரதேசியாவது சொன்னீங்களே? ஏன் பண்ணலைன்னு கேட்டிருக்கோம்?


இலங்கையில் மக்களுக்கு உதவ மருத்துவர்களை அனுப்ப வேண்டி பிரதமருக்கு கடிதம்!

மருத்துவர் அய்யாக்கு ஆப்பாங்க?


இந்த அரசை நீடிக்க விடுங்கள்! மத்திய அரசை வாழ விடுங்கள்!

யாரு செத்தா என்னா? வாழ்ந்தா என்னா? நீங்க யாரையும் வாழ விடாதீர்கள்


பொன்முடி:

கலைஞரின் உடல் நிலை குறித்து விசாரிக்காத வை கோவை...

என்னாத்த சொல்லுறது. கொத்து கொத்தா செத்த சீவனுங்களை பத்தி தலைவர் ஒண்ணுமே சொல்லலையே.


ஜெ:
"......................................................................................................."

எலக்சனுக்கு எனர்ஜி கலக்சனாங்க. ஆளாளுக்கு பேசறப்போ நீங்க பேசலைன்னா சனங்க மறந்துடுவாங்கம்மா.


பிரதமர் தன் அலுவல்களைக் கவனிக்கலாம்‍ - மருத்துவக் குழு

கிரகம் மாறி நல்லதா ஏதாவது நடக்குமாங்க? இல்ல ஆப்பு போய் கத்தி வந்தது கதையா?

8 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

சக்(ங்)கடத்தார் said...

செம ஸீனு! இவ்ளோ சொல்லிட்டு கைவிட வேண்டும் கு என்ன கோஷம்னு சொல்லலைங்களே!//

கலக்கல் தான்??

சக்(ங்)கடத்தார் said...

பிரதமர் தன் அலுவல்களைக் கவனிக்கலாம்‍ - மருத்துவக் குழு

கிரகம் மாறி நல்லதா ஏதாவது நடக்குமாங்க? இல்ல ஆப்பு போய் கத்தி வந்தது கதையா?//

கிரகம் மாறினாலும் நல்லது நடக்காது போல கிடக்கு??
அப்பிடி நடக்கிறதா இருந்தால் எப்பவோ நடந்திருக்குமில்லே?????

S.R.Rajasekaran said...

\\தமிழகத்தில் வன்முறை தடுக்கப்பட வேண்டும்‍‍‍ சோனியா ஆவேசம்\\\அடடா இப்பதான் வன்முறை உங்க கண்ணுக்கு தெரயுதா .பின்னே காங்கிரஸ் காரர்கள் தாக்கப்பட்ட பின்னும் கண்ணு தெரியலன்னா அப்புறம் கோஸ்டி சண்டைய ஆரம்பிச்சிருவாங்க

S.R.Rajasekaran said...

\\ஆட்சியைக் கவிழ்க்க சதி. அய்யோ அம்மா நீங்களா. அம்மா சொன்னாங்கன்னா ஜெயாம்மான்னு நினைச்சிட்டேன்.\\

நானே கதி கலங்கி போய் இருக்கேன் இதுல இந்த அம்மா வேற .இனிமேல் அறிக்கை விடும் பொது பெரிய அம்மா ,சின்ன அம்மா அப்படின்னு பிரிச்சி விட சொல்லுங்கையா

S.R.Rajasekaran said...

\\\போராட்டம் தொடர்ந்தால் மருத்துவமனையில் உண்ணாவிரதம்.\\\அட படத்தோட டைட்டில் நல்லா இருக்கே .ஆனா பாருங்க தெலுங்கு ரீ மேக் மாதிரி இருக்கு

S.R.Rajasekaran said...

\\இந்த அரசை நீடிக்க விடுங்கள்! மத்திய அரசை வாழ விடுங்கள்!\\


வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ன்னு சும்மாவா சொன்னங்க .இருந்தாலும் கிளை மாக்ஸ் சீனுல இது கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான்

S.R.Rajasekaran said...

ஜெ:என் உயரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்களுக்கு இலங்கையில் ராணுவத்தினர் படும் வேதனைகளை அனுதினமும் கண்டு நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன் .எனவே கொடைமலை எஸ்டேட்டில் என் சோகத்தை தனித்து விட்டு மீண்டும் இந்த மைனாரிட்டி அரசினை எதிர்த்து போராடி உங்களை மீட்க்க விரைவில் வருகிறேன்