Saturday, February 21, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 3

வழக்கறிஞர்-போலீஸ் மோதல். ஆட்சியை கவிழ்க்க சதி.

அட சை! இவ்ளோவா அரண்டு போவாங்க?

திருமா, சீமானை ஏன் கைது செய்யவில்லை? காங்கிரஸ் ஆவேசம்.

அதானே. கொஞ்சம் சத்தமா யாரும் கேட்டுடப்படாது.

தி மு தொண்டர் தீக்குளிப்பு.

ஐயோ. ஏன் இப்படி பண்றீங்க. தேர்தல் நேரத்துல போஸ்டர்ல போட்டுக்குவாங்க. அவ்ளோதான்.

நிறுத்துக நிறுத்துக ! இரு தரப்பும் போரை நிறுத்துக- பேரணியில் முழங்கப்பட வேண்டிய கோஷம்.

பின்ன. இத விட சுலபமா தீர்வு இருக்கா? யாராவது கேள்வி கேக்க முடியுமா?


இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி கொடுக்கத் தவறி விட்டது- பா ஜ க

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தவிர நீங்கள் என்ன கொசுக்கடி கொடுத்தீர்கள்?

வக்கீல்கள் - போலீஸார் இணைந்து செயல் பட வேண்டும்.

தோடா இவரு வீடியோ பார்க்கல போல. ரெண்டு பேருமா தானே தாக்கிக்கிட்டாங்க.

காயமடையும் சிங்கள ராணுவத்திற்கு இந்தியா மருத்துவ உதவி.

தாடிக்கு ஒரு சீக்காய் தலைக்கு ஒரு சீக்காயா போடுவாங்க. அதோடயே மக்களுக்கும் அணுப்பலாம்லங்ணா


பிரபாகரன் புலி அல்ல எலி - சுவாமி (ஜூ வி)

அட ! இஞ்ஞார்ரா வீரத்த. பென்ச் பின்னாடில இருந்து சவுன்ட் வருது

9 comments:

S.R.Rajasekaran said...

\\பிரபாகரன் புலி அல்ல எலி - சுவாமி (ஜூ வி)\\


இதுக்கு என்கிட்டே ஆதாரம் இருக்குது .ராவும் என்கிட்டே ரகசிக தகவல் கொடுத்து இருக்கிறார்கள் .முட்டயவச்சி அடிச்சாலும் மொகறைய பேத்தாலும் இந்த உண்மைய நான் வெளிய சொல்ல மாட்டேன் .இந்தியால கேசு போட்டா கொன்னு போட்டுருவாங்க .அதனால ஆப்ப்ரிக்கால போயி கேசு போடப்போறேன்

S.R.Rajasekaran said...

\\காயமடையும் சிங்கள ராணுவத்திற்கு இந்தியா மருத்துவ உதவி.\\\


அடடா என்ன ஒரு மனிதாபிமானம் .
ஏம்பா அவனுக்கிட்ட அப்படி என்னத்த கண்டிங்க .மாச மாசம் ஏதும் ஐட்டம் அனுப்புதானா .அப்ப எங்க ஊரு பொம்பளைய உனக்கு அனுப்பினா எங்களுக்கும் உதவிகிடைக்குமோ ???


அட எச்சு கல நாய்களா

S.R.Rajasekaran said...

\\இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி கொடுக்கத் தவறி விட்டது- பா ஜ க\\\
யாரு அண்ணே ஊருக்கு புதுசா இருக்கு

S.R.Rajasekaran said...

\\வழக்கறிஞர்-போலீஸ் மோதல். ஆட்சியை கவிழ்க்க சதி\\ஒருவேளை இவங்க போட்ட சண்டைய பாத்துட்டு கர்நாடகா காரன் பயந்துபோய் நாட்டை விட்டே போறேன்னு சொன்னானோ என்னவோ.இருந்தாலும் இப்படியா பயப்படுவாங்க

S.R.Rajasekaran said...

\\\திருமா, சீமானை ஏன் கைது செய்யவில்லை? காங்கிரஸ் ஆவேசம்.\\\

அப்படியே கைல வேப்பிலைய கொடுத்து ஆட சொல்லுங்க

S.R.Rajasekaran said...

\\ஐயோ. ஏன் இப்படி பண்றீங்க. தேர்தல் நேரத்துல போஸ்டர்ல போட்டுக்குவாங்க. அவ்ளோதான்.\\கலைஞர் சீக்கிரமே குனமாகவேண்டி தான் தொண்டர் தீக்குளித்தார் .நீங்க வேறமாதிரி திரிச்சி எழுதண்டாம்

Eezhapriya said...

பேஷ் பேஷ் சரியான போட்டி!

Bala said...

நீங்களும் கலந்துக்கலாமே ப்ரியா.

சக்(ங்)கடத்தார் said...

காயமடையும் சிங்கள ராணுவத்திற்கு இந்தியா மருத்துவ உதவி.

தாடிக்கு ஒரு சீக்காய் தலைக்கு ஒரு சீக்காயா போடுவாங்க. அதோடயே மக்களுக்கும் அணுப்பலாம்லங்ணா


பிரபாகரன் புலி அல்ல எலி - சுவாமி (ஜூ வி)

அட ! இஞ்ஞார்ரா வீரத்த. பென்ச் பின்னாடில இருந்து சவுன்ட் வருது//

அடப்பாரு அப்பிடியா சங்கதி???

ம்...பின்னீட்டீங்கள் பிள்ளையள்???

ம்...அது தான் எலியைப் பிடிக்க இப்ப முல்லைத் தீவுக்கை போய் நிண்டு கொண்டு எப்பிடிப் பிடிக்கிறதெண்டு முளிக்கீனை போல??